தற்காப்புக்காக கொலை செய்த இளம் பெண்ணை விடுவித்த திருவள்ளூர் எஸ்பி.,!

Published:

aravindan ips
aravindan ips

திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் IPS, தற்காப்புக்காக கொலை செய்த இளம்பெண்ணை விடுதலை செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், ஜன.2 ஆம் தேதி இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு, அப்பகுதியிலுள்ள வயல்வெளிக்குச் சென்றார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்தவரும் உறவினருமான அஜித் குமார் (25) என்ற இளைஞர், அவரைப் பின்தொடர்ந்து கத்தியைக் காட்டி வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

சற்றும் எதிர்பார்க்காத அப்ம்பெண், அவனிடமிருந்து கத்தியைப் பிடுங்கி, தற்காப்புக்காக கத்தியால் குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த அவன் சிறிது நேரத்திலேயே இறந்தான். இதைத் தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சம்பவத்தை விவரித்து சரண் அடைந்த இளம்பெண் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சோழவரம் காவல்துறை சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து அப்ம்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், தற்காப்புக்காக மட்டுமே அவனை கத்தியால் குத்தியதும், அவருக்கு கொலை செய்யும் எண்ணம் இல்லை என்பதும் இதைத் தொடர்ந்து இளம்பெண் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302இன் கீழ் பதிவு செய்த கொலை வழக்கை, ஐபிசி பிரிவு 100 ஆக மாற்றி பெண்ணை விடுவித்துள்ளார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Related articles

Recent articles

spot_img