
குற்றால அருவிகளில் பெருக்கெடுத்துள்ள வெள்ள நீர் அபாய அளவில் இருப்பதால், கடந்த இரு நாட்களாகவே பொதுமக்கள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், விடாது மழை பெய்து வருவதால், வரும் 17ம் தேதி வரை குற்றால அருவிகளில் குளிப்பதற்கு பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருக்கிறது.
இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்ட அறிக்கை….
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது மேலும் அடுத்த 4 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது இதன் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது எனவே மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் 13/1/21 முதல் 17/1/21 வரை அனுமதிக்கப்பட மாட்டார்கள்
மேலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது எனவே பொதுமக்கள் நீர் நிலைகள் ஆறுகள் அணைகளில் குளிப்பதற்காக செல்ல வேண்டாம் எனவும் கரையோர பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
இந்த கனமழையை முழுவீச்சில் எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்