
சாம்சங் கேலக்ஸி M02 ஸ்மார்ட்போனை இந்தியாவில் பிப்ரவரி 2 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி M02s போனின் மலிவான பதிப்பு இந்த போன் என்று கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போன் அமேசானில் கிடைக்கும், அதற்காக ஒரு பிரத்யேக பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனுக்கான அமேசான் மைக்ரோசைட் மூலம் கேலக்ஸி M02 விலை இந்தியாவில் ரூ.6,000 முதல் ரூ.7,000 க்குள் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அமேசான் பட்டியலின் படி, சாம்சங் கேலக்ஸி M02 6.5 இன்ச் இன்ஃபினிட்டி-V டிஸ்ப்ளேவுடன் HD+ ரெசல்யூஷனுடன் வரும். தொலைபேசி 5,000 mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று பட்டியலின் மூலம் தெரியவந்துள்ளது.
மற்ற அம்சங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
சாம்சங் கேலக்ஸி M02 எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்
முந்தைய கசிவுகளின்படி, சாம்சங் கேலக்ஸி M02 ஆக்டா கோர் குவால்காம் செயலி உடன் இயக்கப்படும். இது ஆண்ட்ராய்டு 10 உடன் இயங்கும், மேலும் இது 3 ஜிபி ரேம் கொண்டிருக்கும். இந்த தொலைபேசியில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் செகண்டரி லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமராக்கள் இருக்கும் என்றும் ஊகிக்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி M02s 6.5 இன்ச் HD+ TFT டிஸ்ப்ளேவுடன் 1560 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் வருகிறது. இது அட்ரினோ 506 GPU 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் உடன் இயக்கப்படுகிறது. தொலைபேசி ஆண்ட்ராய்டு 10 இல் one UI உடன் இயங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி M02s 15W குயிக் சார்ஜ் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். கேமராவைப் பொறுத்தவரை, தொலைபேசி 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவுடன் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்கு, 5 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கும்.