
தில்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல; இந்தியாவை பிளவுபடுத்த திட்டமிடும் பயங்கரவாதிகள்; அமெரிக்காவைப் போல் பிளவுபட்ட நாட்டைக் கைப்பற்ற சீனா முயற்சி செய்யும். உங்களைப் போல் நாங்கள் எங்கள் நாட்டை விற்க மாட்டோம்… முட்டாளே! – என்று, விவசாயிகளுக்கு ஆதரவாக டிவீட் செய்வதாக நினைத்து, தில்லி வன்முறைகளைப் பார்த்தும் ஆதரவாக ட்வீட் செய்த பாப் பாடகி ரிஹானாவுக்கு கங்கனா ரனாவத் பதில் அளித்துள்ளார்.

பாப் பாடகி ரிஹானா விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி ஏன் நாம் பேசவில்லை என்று கேள்வி எழுப்பி ஒரு டிவீட் போட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், இது குறித்து எவரும் பேசமாட்டார்கள். டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல; இந்தியாவை பிளவுபடுத்த திட்டமிடும் பயங்கரவாதிகள்
அமெரிக்காவைப் போல் பிளவுபட்ட நாட்டைக் கைப்பற்ற சீனா முயற்சி செய்யும். உங்களைப் போல் நாங்கள் எங்கள் நாட்டை விற்க மாட்டோம்… முட்டாளே! என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.
விவசாயிகளுக்கு ரஹானா இருக்கிறார். பக்தாஸ்களுக்கு கங்கனா இருக்கிறார் என்று ஒருவர் பதிவிட்டுள்ள டிவீட் கருத்துக்கு, உண்மைதான்… வரலாறு காட்டுகிறது. அரசர் ஜஹாங்கீர் தான் கிழக்கிந்திய கம்பெனிக்கு இந்தியாவில் வர்த்தகம் செய்ய வர்த்தக உரிமம் முதல்முறையாக வழங்கினார். இந்த வழியில் நீங்கள் சென்றால், நீங்கள் மீண்டும் நம்மை ஆள இத்தாலிய அரசுக்கு வழிவிடுவீர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.