ticket-1
ticket-1

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன் நாளை முதல் விநியோகிக்கப்படுகிறது.

சென்னை மாநகராப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் வகையில் நாளை முதல் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை பெற்றுள்ளவர்கள் மற்றும் புதியதாக பெற விரும்பும் தகுதி வாய்ந்த மூத்த குடிமக்கள் ஆவணங்களை சமர்பித்து வாங்கிகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்கள் சமர்பித்து நாளை முதல் டோக்கன்களை பெறலாம் என்றும் மாதம் ஒன்றுக்கு 10 டோக்கன் வீதம் பிப்ரவரி முதல் ஜூலை வரையில் 6 மாதங்களுக்கான டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending