உத்தரகாண்ட் வெள்ளத்தில் தந்தையை இழந்த 4 பெண் குழந்தைகள்! தத்தெடுத்த சோனு சூட்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
Sonu-sood-1
Sonu-sood-1

உத்தரகாண்ட் வெள்ளத்தில் தந்தையை இழந்து பரிதவித்து வந்த 4 குழந்தைகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் தத்தெடுத்துக் கொண்டார்.

கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செய்த உதவிகளால் இந்தியாவையே தனது பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் நடிகர் சோனு சூட். இதைத் தொடர்ந்து, ஏழை குடும்பத்தினருக்கான கல்வி உதவி, விவசாய குடும்பத்திற்கு உதவி என சமூக வலைதளங்கள் மூலம் தனக்கு வரும் அனைத்து உதவிகளையும் அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.

இப்படியிருக்கையில் அண்மையில் உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், தப்போவன் ஹைட்ரோபவர் திட்டத்தில் பணியாற்றி வந்த எலக்ட்ரீஷன் ஆலம் சிங் புண்டிர் என்பவர் சிக்கி உயிரிழந்தார்.

sonu sood
sonu sood

இதனால், வருமானமின்றி, மனைவி உள்பட 4 குழந்தைகளும் பரிதவித்து வந்தனர்.

இவர்களின் நிலை குறித்து சிலர் சோனு சூட்டிற்கு சமூக வலைதளங்கள் மூலமாக தெரியப்படுத்தினர். இதையடுத்து, உயிரிழந்த ஆலம் சிங் புண்டிரின் மகள்களான அஞ்சல், அந்தரா, காஜல், அனன்யா உள்ளிட்ட 4 குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். மேலும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான செலவுகளையும் ஏற்று செய்து கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

ALSO READ:  மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், ‘ இனி இந்தக் குடும்பம் என்னுடையது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.