புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 2 சதவீதம் குறைத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொதுமக்களின் நலன் கருதி, துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை 2 சதவீதம் குறைத்து உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
இதை அடுத்து, புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.40 காசு வரை குறைய வாய்ப்புள்ளது.