27 மணி நேரத்தில் 195 நாடுகளின் தலைநகரங்கள்.. பென்சில் ஊக்கில் செதுக்கி மாணவி சாதனை!

Published:

sneka - 2026

27 மணி நேரத்தில் 195 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை பென்சில் ஊக்கில் செதுக்கி சாதனை படைத்த கல்லூரி மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

சென்னை பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான சினேகா, சில ஆண்டுகளாக பென்சிலில் சிறிய கைவினைப் பொருட்களைச் செய்து வருகிறார். இந்நிலையில், உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில், பென்சிலின் ஊக்கில் நாடுகளின் பெயர்கள் மற்றும் அந்த நாடுகளின் தலைநகரங்களை செதுக்கும் முயற்சியில் மாணவி சினேகா ஈடுபட்டுள்ளார்.

இதனடிப்படையில் 27 மணி நேரத்தில் 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் அதன் தலைநகரங்களை 195 பென்சிலில் செதுக்கி அவர் சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை “கலாம் புக் ஆப்” ரெக்கார்ட்ஸ், அங்கீகாரம் செய்து அந்த மாணவிக்கு சாதனை படைத்ததற்கான சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் விருது வழங்கியது.

இதுபோன்று பென்சிலின் ஊக்குகளில் பல்வேறு உருவங்களை செதுக்கி, அன்பளிப்பாக கொடுப்பவர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் மாணவி சினேகா தெரிவித்தார்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img