12 வந்து மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை! பாய்ந்து காப்பாற்றிய டெலிவரி பாய்!

Published:

delivery boy - 2026

12வது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தையை தாவிப் பிடித்த நபருக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

வியட்நாமில் பொருட்களை டெலிவரி செய்ய வந்த நபர் ஒருவர் ஒரு குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்டுள்ளார். அந்தக் குழந்தையின் தாய் அவரை திட்டுவதால் அந்த குழந்தை அழுது கொண்டிருக்கலாம் என்று அந்த டெலிவரி பாய் எண்ணியுள்ளார். ஆனால் வெகு நேரம் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டதால் அந்த இடத்தை நோக்கி டெலிவரி பாய் சென்றார்.

அப்போது அங்கு ஒரு கட்டிடத்தின் 12வது மாடியின் வெளியில் ஒரு குழந்தை தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் குழந்தை கீழே விழும்போது அவர் தாவி பிடித்துள்ளார்.

சிறிது நேரத்தில் குழந்தையை வாயில் இருந்து ரத்தம் கசிய தொடங்கியதால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், விழுந்த வேகத்தில் குழந்தையின் இடுப்பு எலும்புகள் நகர்ந்துள்ளது என்று தெரிவித்தனர்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

மேலும் குழந்தையை சாமர்த்தியமாக காப்பாற்றிய டெலிவரி பாயின் கைகளில் சுளுக்கு ஏற்பட்டு இருந்தது. ஆகையால் அவர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வீடியோ காட்சி இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. குழந்தையை சாமர்த்தியமாக தாவிப் பிடித்த நபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Related articles

Recent articles

spot_img