கொரோனா தொற்று உள்ளவர் வாக்களிக்க..

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
vote 1 - 2026

வாக்குப் பதிவு நாளன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவர்கள் தேர்தல் ஆணையம் மூலம் கொடுக்கப்படும் பிபிஇ கிட் மூலம் வந்து கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம் என தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மேலும், வாக்காளர்கள் அனைவரும் முக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப் படுவார்கள் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் நேற்று வரை 11 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், பணம் மட்டும் 10.35கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

aligarh-doctor-accused-of-raping-a-corona-positive-patient-in-isolation-ward

தமிழக தேர்தலை கண்காணிக்க 4 சிறப்பு பார்வையாளர்கள் வர இருக்கிறார்கள்.

செலவினம் பார்வையாளர்கள் 2 பேரும், பொதுபார்வையாளர் ஒருவரும் காவல்துறை சிறப்பு பார்வையாளர் ஒருவரும் விரைவில் வருகின்றனர்.

அதன்படி மது மகாஜன், பாலகிருஷ்ணன், அலோக் வர்தன், தர்மேந்திர குமார் உள்ளிட்டோர் வர இருப்பதாகவும், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு 60 பேர் சிறப்பு பார்வையாளர்களாக செல்கின்றனர் என்றும் சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

அனைவரும் முக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அணுமதிக்கப் படுவார்கள் என்றும், தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். கொரோனா முன்னேற்பாடுகள் காரணமாக வாக்கு எண்ணிக்கை மையம் அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.

sathyapradha sahoo
sathyapradha sahoo

மேலும், வாக்கு பதிவு நாளன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், தேர்தல் ஆணையம் மூலம் கொடுக்கப்படும் பிபிஇ கிட் அணிந்து வந்து கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம் என்றும் சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.