விமானியைத் தாக்கிய பூனை! அவசரமாய் தரை இறக்கப்பட்ட விமானம்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
pm flight - 2026

சூடானில் விமானியை பூனை தாக்கியதால் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சூடானில் கார்டூம் விமான நிலையத்தில் இருந்து டர்கோ ஏர் விமானம் கடந்த புதன்கிழமை கத்தாரை நோக்கி புறப்பட்டது. கிளம்பிய 30 நிமிடத்தில் திடீரென பூனை ஒன்று விமானி அமர்ந்து இருக்கும் இடத்திற்குச் சென்று அவரை தாக்கத் தொடங்கியது.

இதனையடுத்து, விமானத்தை மீண்டும் சூடானுக்கு திருப்பி தரையிறக்கினார் விமானி. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், “விமானத்தில் பூனை எப்படி வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் பூனை விமானத்தை சுத்தம் செய்யும் போது அல்லது தொழில்நுட்ப சோதனை செய்யும்போது யாரும் கவனிக்காத நேரத்தில் ஏறியிருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.