
திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவிற்கு எதிராக அவரது தாயார் பேசியுள்ளதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான பூங்கோதை ஆலடி அருணா மீண்டும் போட்டியிடுகிறார். இதனையடுத்து அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் பூங்கோதை குறித்து அவரது தாயார் கமலா பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், தனது கணவர் ஆலடி அருணா மிகவும் நேர்மையானவர் என்றும் யாரிடமும் லஞ்சம் வாங்காதவர். நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள் என கூறியுள்ளார்.
ஆனால் பூங்கோதை அதற்கு எதிர்மாறாக உள்ளதாகவும், கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி இருக்கிறார். திருவண்ணாமலையில் ஒரு ரிசார்ட், மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட் கட்டியுள்ளதாகவும் கமலா தெரிவித்துள்ளார்.
மேலும் பூங்கோதை ஜெயிக்கக்கூடாது என தான் கடவுளை வேண்டுவதாகவும், எனவே தயவுசெய்து அவருக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் எனவும் கமலா தெரிவித்துள்ளார்.