
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க நடிகர் அஜித் திருவான்மியூர் கார்ப்பரேஷன் பள்ளிக்கு வாக்கு சாவடிக்கு வருகை தந்தார்.

அஜித்தின் காரை பார்த்த அவரது ரசிகர்கள், அவரை சூழ்ந்து கொண்டனர். ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததை அடுத்து நுழைவு வாயிலிருந்து அவரை பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்றனர்.

அஜித் வாக்குப்பதிவு செய்வதற்கு 20 நிமிடங்களே முன்னரே வருகை தந்ததால் அவர் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

அவரை தொடர்ந்து அஜித் மனைவி ஷாலினியும் தனது வாக்கினை பதிவு செய்தார். அஜித் வாக்களித்த பின் மீண்டும் பாதுகாப்புடன் அவரை போலீசார் அழைத்து சென்றனர்.

இதனிடையே நேற்றே தல ரசிகர்கள், அஜித்குமார் ஆர்மி என்ற ட்விட்டர் பதிவில் அஜித்தை நன்கு புரிந்து கொண்டவர்களான அவரது ரசிகர்கள் அஜித் வாக்களிக்க வரும் பொழுது செல்ஃபி எடுத்து அவரை தொந்தரவு தர வேண்டாம். இது அவருக்கும் பிடிக்காது என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். கூட்டத்தை தவிர்க்கும் படியும், கோஷங்கள் எழுப்ப வேண்டாம் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யாதீர்கள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
