ஆட்டு பண்ணைலயே கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்: எம்கேஎஸ்.,க்கு கேபிஆர் வேண்டுகோள்!

Published:

stalin kodaikanal
stalin kodaikanal

ஸ்டாலினுக்கு வேண்டுகோள் என்ற தலைப்பில், டாக்டர் கே.பி. ராமலிங்கம் எழுதியதாகக் குறிப்பிடப் பட்டு, சமூகத் தளங்களில் வைரலாகிவருகிறது ஒரு கடிதம். அதில் …

“தனி விமானம் ஏழு நட்சத்தர விடுதி சுகபோகம் என்று ரூபாய் 2 கோடி செலவு செய்து கொடைக்கானல் சுற்றுலா சென்று ஆடுகளோடும் முயல்களோடும் விளையாடி விட்டு சென்னை திரும்பி காணொளி காட்சி மூலம் பேசி கரோனொ இரண்டாம் அலை பரவலை தடுக்க முயலும் ஸ்டாலினுக்கு பணிவான வேண்டுகோள் .

தாங்கள் பிரசாந்த் கிஷோருக்கு கொடுத்து வீணாகிப்போன தொகையில் பாதி அளவாவது எல்லா மாவட்டச் செயலாளர்களிடம் கொடுத்து அவர்கள் மூலமாக கொரானா உதவி மையங்களை தொடங்க செய்யுங்கள் .

அதை விட்டு காணொலியில் உங்க ஊரில் கொரானா எப்படி இருக்கிறது என்று மட்டும் கேட்டு நகைச்சுவையில் வடிவேலுவை மிஞ்சிவிடாதீர்கள் . இது என் கருத்து என்று ஏற்காமல் விட்டுவிடாதீர்கள் .

இது தேர்தல் தோல்வியை எதிர்நோக்கியுள்ள பல திமுக மாவட்ட செயலாளர்களின் கருத்து. மேலும் பொதுமக்களின் கருத்து!

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

ஸ்டாலின் வாயைத் திறக்காமல் ஆட்டுப் பண்ணையிலேயே இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு வந்திருந்தால் தமிழக அரசும் அரசுத் துறை அதிகாரிகளும் முறையாக கவனமாக பாதுகாப்பார்கள்… இவர் என்ன என்ன உளறப் போகிறாரோ என பயப்படுகிறார்கள் .

ஆகவே தாங்கள் கொஞ்சம் அமைதி காத்து தமிழக மக்கள் மீது கருணை காட்டுங்கள் ஸ்டாலின்! என்று 30ஆண்டுகள் உங்களோடு பழகிய நண்பன் என்ற வகையில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்”

அன்பன்:-
டாக்டர் கே பி இராமலிங்கம் Ex MP (BJP)

என்று குறிப்பிட்டு, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இதனிடையே, மு.க. ஸ்டாலின் இன்று இரண்டாவது கொரோனோ தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

Related articles

Recent articles

spot_img