மு.க. அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கு சென்னைக்கு மாற்றம்!

Published:

alagiri
alagiri

மதுரை: முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக., முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கு, சென்னைக்கு மாற்றப் பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தனது அறக்கட்டளை மூலம் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை பகுதியில் தயா பொறியியல் கல்லூரியை கட்டினார். இதற்காக அப்பகுதியில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்ததாக அந்த புகாரின் பேரில் , நில அபகரிப்பு பிரிவு போலீசார் முக அழகிரிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கின்,  விசாரணை மதுரையில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கின் 465, 468,471 ஆகிய  சட்டப் பிரிவுகள்  பொருந்தாது என  உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அரசுத் தரப்பு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், நில அபகரிப்பு வழக்கில், மு.க அழகிரி மீதான சில பிரிவுகள்  பொருந்தாது என மதுரை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை  ரத்து செய்ய வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணவள்ளி, சென்னை உயர்நீதிமன்ற சுற்றறிக்கையின் அடிப்படையில்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அழகிரி மீதான இந்த வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Related articles

Recent articles

spot_img