கனடா இந்தியாவிற்கு 74 கோடி நிதி உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது ஆலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள முன்வந்து தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறது.
அந்த வகையில் கனடா 10 மில்லியன் டாலர்களை இந்தியாவிற்கு நிதியுதவியாக வழங்கவுள்ளது.
இதுகுறித்து கனடாவினுடைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாவது, கொரோனா தொற்று குறித்த நடவடிக்கைகளுக்காக இந்தியாவிலிருக்கும் செஞ்சிலுவை சங்கத்திற்கு இந்த நிதியை வழங்குகிறோம் என்றுகூறியுள்ளார்.
மேலும் இந்த நிதி நிச்சயமாக ஆம்புலன்சின் சேவைகளுக்கும், பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கும் உதவும் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து தங்களால் முடிந்தவரை இந்தியாவிற்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம் என்றார். இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையேயான வெளியுறவு அமைச்சர்களுக்குகிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.