நெல்லை மாவட்டம் பணகுடியில் லோசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
நெல்லை மாவட்டம் கடற்கரை கிராமங்களான கூடன்குளம், கூட்டபுளி, பெருமணல், பஞ்சல் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதேபோல் பணகுடி, கள்ளிகுளம், வள்ளியூர், செட்டிகுளம், இடிந்தகரை போன்ற பல்வேறு பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் அச்சடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நேற்று அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் சேதமாயின. பல இடங்களில் நிலத்தில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.