December 6, 2025, 9:45 AM
26.8 C
Chennai

கொரோனா… வீட்டிலேயே தனிமைப் படுத்தி சிகிச்சை பெறுவோர் கவனத்துக்கு!

corona awareness
coimbatore-covid-banner-1
  • டாக்டர் ராஜேஷ் (Dr. Rajesh)

கொரோனாவின் முதல் அலையைக் கையாண்டதைக் காட்டிலும் இப்போது இருக்கும் கடுமையான நிலையைக் கையாள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் பல உள்ளன…

1) அதிபயங்கரமாக அதிகமாகும் நோயாளிகளின் எண்ணிக்கை..
2) ஊரடங்கு போட இயலாத நிலை..
3) மருத்துவமனையில் படுக்கைகள் தட்டுப்பாடு..
4) Oxygen தட்டுப்பாடு..
5) மருத்துவ ஊழியர்களின் தட்டுப்பாடு..
– இதனால் வீட்டிலேயே மருத்துவம் செய்து கொள்ளவேண்டிய நிலை…

பல கேள்விகள் பலரிடமிருந்து வந்துகொண்டு இருப்பதால் சில பொதுவான சந்தேகங்களுக்கு பதில்கள் கீழே..

இது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்பவர்களுக்கும் அவர்களைக் கண்காணிப்பவர்களுக்குமான அறிவுரைகள் மட்டுமே…

இவை CMC Vellore, Sundaram Medical Foundation மற்றும் ministry of health and family welfare’ ன் பரிந்துரைகளின் தொகுப்பு..

இதோடு கீழே கமெண்ட் பகுதியில் TN hospital bed availability updates link’ம் சேர்க்கப்பட்டுள்ளது..


1) எந்த வித அறிகுறிகளும் இல்லாமல் RT PCR பரிசோதனை மட்டுமே Positive என்ற நிலை – Home isolation போதுமானது..மருந்துகள் தேவையில்லை…பாதுகாப்பு முறைகளைக் கடைப்படித்தல் போதும்..

2) சாதாரண சளி, காய்ச்சல், தலைவலி போன்ற சிறுசிறு அறிகுறிகள் + RT PCR Positivity + ரத்தத்தில் oxygen அளவு 90 முதல் 94 சதவிகிதம் வரை – Home isolation போதுமானது..

corona-test

A) Paracetamol 650mg இரண்டு அல்லது மூன்று வேளைகள்…

B) Foracort-200 inhaler (இரு மருந்துகள் கொண்ட சுவாச நிவாரணி) ஒரு நாளைக்கு இரு முறை…இதை எப்படி பயன்படுத்துவது என்பதை மருந்தகத்தில் வேலை செய்பவரே விளக்குவார்…

C) Tab Montek LC – மாத்திரை, காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றும்..

D) Tab Mucinac 200mg ஒரு நாள் ஒன்று அல்லது இரண்டு வேளை..

E) ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைக்கு Steam inhalation எடுத்துக் கொள்ளுதல்..

-மேற்கூறிய முறைகளை/மருந்துகளை 5 முதல் ஏழு நாட்கள் வரை கடைப்பிடிக்கலாம்..

3) Favipiravir, Doxycycline, Ivermectin, Azithromycin, Colchicine போன்ற மருந்துகளின் நம்பகத்தன்மை இன்னும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படாததால் இவற்றை பரிந்துரைக்கவில்லை… உங்களுக்கு மருத்துவம் செய்யும் மருத்துவர் இதில் ஏதேனும் ஒன்றைப் பரிந்துரைத்தால், அவரது அறிவுரையின்படி எடுத்துக்கொள்ளலாம்…நீங்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது…

mask2
mask2

4) N-95 முகக்கவசம் இன்றியமையாதது..

5) Caretaker’ம் பாதிக்கப்பட்டவரும் ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடித்தால் தொற்று பரவுவதைக் தவிர்க்கலாம்..

6) முகக்கவசத்தின் முன்பகுதியைத் தொட வேண்டாம்

7) நாம் பயன்படுத்தும் அன்றாட பொருட்களின் மூலம் கொரோனா பரவாது என்றாலும் நோயாளியின் பொருட்களை முடிந்தவரை அவரை கவனித்துக் கொள்பவர் தொடாமல் இருப்பது நல்லது..

8) மேலே உள்ள category’ல் வரும் 80% நோயாளிகள் பெரும்பாலும் மேற்கூறிய முறைகளில் 7 அல்லது பத்து நாட்களுக்குள் குணமடைந்து விடுவார்கள்..

9) நீங்கள் கவனமாக பார்க்க வேண்டியது – blood oxygen level, நோயாளியின் நினைவு நிலை (conscious level) மற்றும் மூச்சுத் திறன்…

10) எந்த தொந்தரவும் இல்லாமல் oxygen அளவு 90’க்கும் கீழே குறைந்தாலோ, மூச்சுத் திணறல் அதிகமானாலோ உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்..

vapour
vapour

11) ரத்தத்தில் C-Reactive protein அதிகமாக இருத்தல், பசியின்மை, சிறு வயிற்றுப்போக்கு, வாந்தி, கண்ணெரிச்சல், நுகர்வாற்றல் இழப்பு – இவையெல்லாம் இந்த நோயின் தன்மைகள்..நோய் குணமாக ஆக இவைகளும் சரியாகும்..பயங்கொள்ளத் தேவையில்லை..

12) Steroid மருந்துகளை (மேலே குறிப்பிடப்பட்ட Inhaled steroid Foracort தவிர்த்து) எக்காரணம் கொண்டும் மேற்கூறிய வகையில் வருபவர்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது..

13) 7 முதல் 10 நாட்களில் உங்களுக்கு நோயின் தொடக்கத்தில் வந்த அறிகுறிகள் அனைத்தும் மறைந்து விட்டால் நீங்கள் குணமாகிவிட்டதாகவே பொருள்..திரும்பவும் RT PCR test எடுத்துக் கொள்ளத் தேவையில்லை…

14) RT PCR Positive என்று வந்து விட்டாலே CT scan chest எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. 5 நாட்களுக்கு மேல் தொடர்ந்து இருமல், சளி இருந்தால் எடுக்க வேண்டும்..

15) மூச்சுத் திணறல் இருந்தாலோ, எந்த மூச்சுத்திணறலும் இல்லாமல் ஆக்சிஜன் அளவு 90க்கும் கீழே இருந்தாலோ CT SCAN எடுக்க வேண்டும்..இவர்கள் தீவிர வகையில் (moderate/severe covid category) வருவதால் மருத்துவமனையில் மட்டுமே மருத்துவம் சாத்தியம்…அங்கே எப்படியும் இந்த நிலைக்கு CT எடுக்கப்பட்டுவிடும்..

16) மூச்சுத் திணறல் இருந்து, சிடி ஸ்கேனிலும் தொந்தரவுகள் இருந்து மருத்துவத்திற்குப்பின் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டால் திரும்ப சிடி ஸ்கேன் எடுக்க வேண்டிய அவசியமில்லை..கோவிட் தாக்கத்தினால் CT scan’ல் தென்படும் நுரையீரல் தழும்புகள் முற்றிலும் மறைய இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகலாம்….

madurai gh corona wastage1
madurai gh corona wastage1

17) நோயின் அறிகுறிகளிலிருந்து முற்றிலும் விடுபட்ட நாளிலிருந்து 4 முதல் 6 வாரங்களில் முதல் தவணை தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம்…

18) RT PCR என்பது கோவிட் தொற்றில் 70% பேருக்கு மட்டுமே Positive என்று வரும்…ஆகையினால் அது negative என்று வந்தாலும் கோவிட் தொற்றின் அறிகுறிகளான மூச்சுத் திணறல் இருந்தால் சிடி ஸ்கேன் எடுப்பது அவசியம்..

19) முதல் அறிகுறி வந்த நாள் தொடங்கி/அல்லது RT PCR Positive என்று வந்த நாள் தொடங்கி பத்தாவது நாள் முதல் பதினாங்காவது நாளுக்குள் குணம் ஏற்பட்டுவிட்டதாக எடுத்துக் கொள்ளலாம்…காய்ச்சல் மற்றும் ஏனைய அறிகுறிகள் இல்லாமல் இருத்தல் வேண்டும்..அப்படி இருக்கும் பட்சத்தில் வீட்டுத் தனிமையை முடித்துக் கொள்ளலாம்..மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை..

20) கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைக்கு தாய்ப்பால் தரும் பெண்களும் தற்பாேதைய நிலைப்படி தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது…இதற்கான பரிந்துரைகள் மாறும்போது அறிவிப்புகள் வரும்..

21) கோவிட் எங்கும் இருப்பததால் “எங்கம்மா வெளியில் செல்வதேயில்லை…மாஸ்க்கை கழட்டுவதேயில்லை..பின் எப்படி வந்தது?” என்றெல்லாம் ஆராய்ச்சி செய்வது வீண்வேலை…..

22) கோவிட் தொற்று இருப்பவர்கள் சமைக்கலாமா என்றால் சமைக்கலாம்..கட்டுப்பாடு இறுக்கப்பட்டு வரும் இந்நாட்களில் ஆன்லைன் மூலமாகவும் உணவுகள் பெறுவது கடினமாக போகலாம்..ஆகையால் கோவிட் தொற்று இருப்பவர்கள் பாதுகாப்புடன் சமையல் செய்யலாம்…கையுறைகள் அணிந்து கொள்ளுதல் நல்லது..உணவுகளைப் பரிமாறும்போது மட்டும் அருகில் செல்லாமல் ஆறு அடிகள் இடைவெளியைக் கடைப்பிடித்தல் நல்லது..பரிமாறப்பட்ட உணவுப் பொருட்கள் மூலமாக கோவி்ட் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதால் பயம் வேண்டாம்..

23) தனிமைப்படுத்திக் கொள்ளும்போது குழந்தைகளை எப்படி கையாள்வது என்பதற்கு நல்ல விளக்கம் ஒரு குழந்தை மருத்துவரிடம் கிடைக்கும்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories