December 6, 2025, 2:47 AM
26 C
Chennai

கார் கிளினிக்: 9 வயது சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்! கிடைத்த ரூ.72671!

car cleaning
car cleaning

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் 9 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பம் பயன்படுத்தும் SUV. காரின் ப்ளோர் போர்டின் (floorboard) கீழ் ஆயிரக்கணக்கான டாலர்களைக் கண்டுபிடித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

தனது தந்தையின் செவ்ரொலெட் சபர்பன் (chevy suburban) காரை சுத்தம் செய்து கொண்டிருந்த 9 வயது சிறுவனான லாண்டன் மெல்வின் (Landon Melvin), காரின் ப்ளோர் மேட்டை எடுத்து க்ளீன் செய்து கொண்டிருந்தார்.

இந்த காரை சிறுவனின் தந்தை கடந்த செப்டம்பர் மாதம் செகண்ட் ஹேண்டில் எடுத்துள்ளார். சிறுவன் லாண்டன் மெல்வின் ப்ளோர் மேட்டை எடுத்து சுத்தம் செய்ய முயன்ற போது கவர் ஒன்று அவன் கண்ணில் பட்டது.

அப்போது அதை குனிந்து எடுத்த சிறுவன் லாண்டன் மெல்வின் இது ஏதாவது முக்கிய பொருளாக இருக்க போகிறது என்று நினைத்து தனது தந்தையை கார் நிற்கும் இடத்திற்கு அழைத்து காட்டி உள்ளான்.

ஆனால் துவக்கத்தில் அவனது தந்தையோ செகண்ட் ஹேண்டாக வாங்கிய காரில் ஏதாவது பழைய பொருள் அல்லது தேவையில்லாத பேப்பர் அல்லது டாக்குமென்ட்டுகள் தான் கிடக்கும் என்று சிறுவனிடம் பதில் கூறி உள்ளார்.

மேலும் மகன் லாண்டன் மெல்வின் காட்டிய கவரை பிரித்து பார்க்க ஆர்வம் காட்டவில்லை அவனது தந்தையான மைக்கேல் மெல்வின் (Michael Melvin). ஆனாலும் விடாத சிறுவன் லாண்டன் மெல்வின் அந்த கவரை பிரித்து என்ன இருக்கிறது என்று பார்க்கும்படி தெடர்ந்து வற்புறுத்தி உள்ளான்.

car 1
car 1

சரி மகன் இவ்வளவு தூரம் கேட்கிறானே என்பதற்காக அவன் காரிலிருந்து கண்டெடுத்த காகித உறையை பிரித்து பார்த்தார் மைக்கேல். ஆனால் அதனுள் இருந்த பொருட்களை 5 குழந்தைகளின் தந்தையான மைக்கேல் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஏனென்றால் அந்த காகித உறைக்குள் ஆயிரக்கணக்கான டாலர் நோட்டுகள் மற்றும் சில காசோலைகள் இருந்தன. வெறும் பேப்பர் டாக்குமென்ட்டாக இருக்கும் என்று கவரை பிரித்த மைக்கேல் இதை பார்த்து அதிர்ச்சியில் வாயடைத்து நின்றார்.

பின் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து திரும்பி வீட்டிற்குள் ஓடிய மைக்கேல், மகன் லாண்டன் கண்டுபிடித்ததைக் காண வருமாறு தன் மனைவியை கூப்பிட்டார். அவரும் ரொக்கத்தை கண்டு அதிர்ச்சியடைந்தர்.

அதன் பிறகு படுக்கை அறைக்கு சென்று இருந்த ரொக்கத்தை மெத்தை மீது கொட்டி எண்ணி பார்த்த போது அதில் சுமார் 5,000 டாலர் ரொக்கம் தேறியது அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,63,583. தென் கரோலினாவில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களின் பணம் இது என்பதை கண்டறிந்த மைக்கேல், பணத்தை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க முடிவெடுத்தார்.

இதனை அடுத்து அந்த குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தான் வாங்கிய செகண்ட் ஹேண்ட் காரிலிருந்து பணம் கண்டெடுக்கப்பட்ட விஷயத்தை சொல்லியுள்ளார். இதனை அடுத்து பணத்தை பெற ஒப்பு கொண்ட அந்த குடும்பத்தினர் ஒரு சிறிய நிபந்தனையை விதித்தனர்.

money doller
money doller

பணத்தை கண்டெடுத்த சிறுவன் லாண்டன் தனது நல்ல செயலுக்காக 1,000 டாலர் தங்களிடமிருந்து வாங்கி கொண்டால் மட்டுமே முழு பணத்தையும் தாங்கள் வாங்கி கொள்வோம் என்று பணத்தின் உரிமையாளர்கள் கூறினர்.

இதற்கு சிறுவனின் தந்தை சம்மதம் தெரிவித்ததை அடுத்து, லாண்டன் மெல்வினிடம் 1000 டாலர் ரொக்கத்தை அளித்த பிறகு கண்டெடுக்கப்பட்ட பணத்தை அதன் உரிமையாளர்கள் வாங்கி கொண்டுள்ளனர்.

இதனால் உற்சாகமடைந்துள்ள சிறுவன் லாண்டன் மெல்வின், தனக்கு கிடைத்த இந்த 1,000 டாலர் வெகுமதி பணத்தை கொண்டு தான் வாங்க நினைத்துள்ள எல்லா பொருட்களையும் வாங்க போவதாக கூறி உள்ளான்.

சிறுவன் மற்றும் அவனது தந்தையின் நேர்மை மற்றும் அந்த நேர்மையை தவறாமல் பாராட்டி பரிசளித்த பணத்திற்குரியவர்கள் என அனைவரின் செயலையும் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories