
20 கிலோமீட்டர் துரத்திச் சென்று வழிப்பறிக் கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர் …
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா(30) . இவர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா மருத்துவமனையில் செவிலியராக
உள்ளார் .
இவர், சம்பவதன்று பணிக்காக, யானைக்கல் பாலத்தில் சென்றுள்ளார். பின்னால் அவரை பின்தொடர்ந்த இரு சக்கர வாகனத்தில் சென்ற மூன்று நபர்கள் சண்முகப்பிரியாவை தாக்கி 6 பவுன் செயின் அலைபேசியை பறித்து தப்பினர்.
இதில் கீழே விழுந்த சண்முகப்பிரியா தலையில் அடிபட்டு மயக்கமுற்றார். தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார் சம்பவம் குறித்து, அறிந்த மதுரை மாநகர காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்கா துணை கமிஷனர் ராஜசேகர் உத்தரவின்படி, உதவி ஆணையர் ரவி வினோஜி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதில், இன்ஸ்பெக்டர் சங்கர் ,பெத்துராஜ், சீனிவாசன், துணை ஆய்வாளர்கள் தென்னரசு , செந்தில், தலைமைக் காவலர்கள் சலேத்துராஜ், சஞ்சீவ் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர் . பின் , அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது , நகை பறிப்பு ஈடுபட்டவர்கள் மதுரை நெல்பேட்டை யே சேர்ந்த அசாருதீன் 21. சல்மான் கான் 25 . மாலிக் பைசல்.21. எனத் தெரியவந்தது .
சக் குடியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரியவே, போலீசார் அப்பகுதிக்கு சென்றனர் காவல்துறை வருவதை அறிந்த மூவரும் அங்கிருந்து இருசக்கர வாகனம் மூலமாக தப்பினர். சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் போலீசார் அப்பகுதியில் துரத்தி சென்றனர்
பாலம் வழியாக அவர்கள் வர வேண்டும் என்பதால் தனிப்படை போலீசார் பாலத்தை அடைத்து காத்திருந்தனர். மூவரையும் கைது செய்த போலீசார் அலைபேசி மற்றும் நகையும் மீட்டனர் .
சல்மான் கான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் அசாருதீன் மீது 7 வழக்குகள் உள்ளன. மூவரும் கடந்த சில நாட்களாக டூவீலர் திருட்டு அலைபேசி டவரில் உள்ள பேட்டரிகள் திருட்டு ஈடுபட்டது தெரியவந்தது.
24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாநகர காவல் ஆணையாளர் பாராட்டு தெரிவித்தார் .