December 6, 2025, 3:11 AM
24.9 C
Chennai

டைனசோரின் பாத சுவடுகள் கண்டுபிடிப்பு!

dinosaure - 2025

முற்றிலும் அழிந்து போன உயிரினமான 6 வகை டைனோசர் இனங்களின் பாத சுவடுகள் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கென்ட் என்ற பகுதியில் 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் பாதச் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ஆராய்ந்த ஹேஸ்டிங்ஸ் மியூசியம் அண்ட் ஆர்ட் கேலரி, இதுகுறித்து ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இந்த பாத சுவடானது உயர்ந்த மலைப்பகுதியிலும் கடற்கரைப் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் புயல்களின் காரணமாக மணல், கடற்கரைப் பகுதி என தொடர்ந்து பாதித்து புதிய புதைபடிவங்களை வெளிவர செய்துகொண்டிருக்கிறது.

ஆனால் டைனோசர் பாத சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டது இது தான் முதல் முறை என்பதால் இது மிகச் சிறந்த கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இந்த டைனோசர் இனம் முற்றிலும் அழிந்து போவதற்கு முன் இந்த நாட்டில் உலவித் திரிந்திருக்கும் என தொல்லுயிரியல் துறை பேராசிரியர் டேவிட் மார்டில் தெரிவித்தார்.

மேலும் டைனோசர்கள் தற்போது ஒயிட் கிளிஃப்ஸ் ஆப் டோவர் இருக்கும் இடத்தில் உலவியிருக்கின்றன. அடுத்த முறை நீங்கள் அதனருகில் படகில் செல்லும் போது டைனோசர்கள் குறித்து கற்பனை செய்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசர்களின் பாத சுவடுகள் ஃபோக்ஸ்டோன் மியூசியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பாத சுவடுகள் பல்வேறு வகை டைனோசர்ளுடையது. அவை 110 ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த டைனோசர்கள் ஆங்கிலோசார்ஸ் (Ankylosaurs)என்ற வகையைப் போன்றது. இதற்கு பார்ப்பதற்கு மிக கரடுமுரடு தோற்றத்தில் காணப்படும்.

இதுகுறித்து ஹேஸ்டிங்ஸ் மியூசியம் மற்றும் ஆர்ட் கேலரியைின் முதன்மை கியூரேட்டர் பிலிப் ஹேட்லேண்ட் தெரிவித்ததாவது, கடந்த 2011 ஆம் ஆண்டு ஃபோக்ஸ்டோனில் பாறைகளில் வித்தியாசமான மாற்றங்கள் காணப்பட்டது.

மீண்டும், மீண்டும் அது போல் காணப்பட்டது. நான் அவை பாத சுவடுகளாக இருக்கும் என்று கணித்தேன். பொதுவாக இதனை புவியியலாளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஆனால் அது குறித்து தீவிரமான பரிசோதனையில் ஈடுபட்டேன். அதற்காக போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக வல்லுநர்கள் கொண்ட குழுவுடன் இதுகுறித்து ஆராய்ந்தேன். ஏனெனில் அறிவியல் குழுவினரை ஒப்புக்கொள்ளச் செய்வது கடினமானது என்றார்.

மேலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலான பாத சுவடுகள் தனித்துவமானது. ஆனால் அவை 6 பாத சுவடுகள் இணைந்து ஒரு வழித்தடம் போல உருவாக்கியிருக்கிறது.

அதாவது ஒரே விலங்கின் ஒன்றுக்கு மேற்பட்ட பாதச்சுவடுகளால் ஆனது. அவை யானையின் பாத சுவடிற்கு சமமாக இருந்தது.

இதில் பெரிதான பாத சவாடனது 80 செமீ அகலமும், 65 சமீ நீளமும் கொண்ட Iguanodon வகையைச் சேர்ந்தது. இவை 10 மீட்டர் வரை நீளம் வளரக் கூடியது. இவை இரண்டு கால்களிலும், சில சமயம் நான்கு கால்களிலும் நடக்கக் கூடியது. இவை தாவர வகைகளை உண்ணக் கூடியது என தகவல் அளித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories