Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeஅடடே... அப்படியா?ஒரே பிரசவத்தில் 10 பிள்ளை! விளம்பரத்திற்கு கூறிய பொய்!

ஒரே பிரசவத்தில் 10 பிள்ளை! விளம்பரத்திற்கு கூறிய பொய்!

- Advertisement -
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 37 வயதுடைய சிதோலே எனும் பெண்மணி ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்ததாக கூறப்பட்டது.

இதில் 7 ஆண் குழந்தை 3பெண் குழந்தை எனவும் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் எனவும் கூறப்பட்டது. மேலும் இது உலக சாதனையாக கருதப்பட்டதுடன், உலகம் முழுவதும் பல இடங்களில் இது குறித்த செய்திகள் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இதனை அடுத்து அந்தப் பெண்மணியின் தோழி தனது தோழிக்கு ஏழு சிறுவர்களும் மூன்று சிறுமிகளும் பிரிட்டோரியா மருத்துவமனையில் பிறந்துள்ளதாகவும், தான் தற்பொழுது மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பிரிட்டோரியா மருத்துவமனையில் விசாரித்த பொழுது நாங்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை என கூறியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து பல இடங்களில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், 10 குழந்தைகள் பிறந்தது என்பது விளம்பரத்திற்காகவும் நன்கொடை பெறுவதற்காகவும் கூறப்பட்டது எனது தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிதோலே கடந்த ஜூன் 17 ஆம் தேதி அதிகாலை ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அருகிலுள்ள ராபி ரிட்ஜின் வடக்கு நகரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சிதோலே என்னும் இந்தப் பெண் 10 குழந்தைகள் பெற்று எடுக்கவில்லை எனவும், தென் ஆப்பிரிக்க தேசிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னாப்பிரிக்காவின் தேசிய சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதோலே என்னும் இந்தப் பெண்மணிக்கு 10 குழந்தைகள் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பெண்மணியின் வழக்கறிஞர் இது குறித்து கூறுகையில்….சிதோலே தனது விருப்பத்திற்கு எதிராக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிப்பதற்கு நீதிமன்ற உத்தரவுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தற்போது அவர் மனநிலை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் கைவிலங்குடன் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -