எல்லாம் சானிடைசர் மயம்: சுட்டியின் மனதில் பதிந்த பதிவின் விளைவு! வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
sanitizer - 2026

ஒரு வயது குழந்தை ஒன்று செய்யும் சேட்டைகள் இணையத்தை கலக்கி வருகிறது.

2020ஆம் ஆண்டில் பிறந்த ஒரு குழந்தை, இந்த உலகில் அனைத்துமே சானிடைசர் என நினைத்து தெருவோர மின்கம்பம் முதல், சின்ன சின்ன பெட்டி வரை எதை கண்டாலும், கைகளை நீட்டி பின்னர் கைகளை துடைத்துக்கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

babygram.tr என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த கியூட் வீடியோவில் உள்ள குழந்தை செய்யும் மழலை சேட்டை காண்போரை ரசிக்க வைக்கிறது.

மிகவும் வேடிக்கையான இந்த வீடியோவை 1.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்த வீடியோவில், குட்டி பெண் குழந்தை சாலையில் தெருவிளக்குகள், மின்கம்பங்களில் இருக்கும் பாக்ஸ் போன்ற அமைப்பின் கீழ் தனது கையை வைக்கிறார்.

அதன்பின், இரண்டு கைகளை கொண்டு தேய்த்து கொண்டே செல்கிறார். இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட அழகான வீடியோவைப் பாருங்கள். பலரும் அந்த வீடியோவிற்கு கமென்ட் செய்து வருகின்றனர்.

இந்த கொரோனா தொற்றுநோய் மனித வாழ்க்கையை நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ட்ரெண்டிங் வீடியோ நமக்கு அதையே உறுதிப்படுத்துகிறது.

அவள் பிறந்ததிலிருந்தே வாழ்க்கையில் சானிடைசர் மூலம் கைகளை தூய்மை படுத்தியுள்ளதை பார்த்து வளர்ந்துள்ளார். அதற்கு இந்த வீடியோவே சாட்சியாக அமைக்கிறது. அவள் வாழ்க்கையில் பார்த்த அனைத்து வகையான உபகரணங்களும் அவளுக்கு ஒரு சானிடைசர் போல இருந்திருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.