ஆடிப்பெருக்கு ஆடி- 18 ஆன்மீக திருவிழாவில் 8 அன்னை தாமிரபரணிக்கு சீர்செய்ய வருமாறு விஷ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நெல்லை மாவட்ட செயலாளர் இ.ஆறுமுகக்கனி தெரிவித்ததாவது…
பாரத நாடு முழுவதும் ஹிந்துக்கள் நதிகளை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர் அந்த வகையில் தாமிரபரணி தாய்க்கு உகந்த நாளான ஆடிபெருக்கு 18 ஆகஸ்ட் 3 அன்று ஹிந்துக்களின் ஆன்மீகத் திருவிழாவான தாமிரபரணி நதிக்கு அபிஷேகம் செய்து தாய்மார்கள் அனைத்து மங்களகரமான பொருள்கள் கொண்டு சீர்செய்யும் நிகழ்வு நடைபெற இருக்கிறது,
இது தொடர்பாக விவாதிக்க விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாநில செயலாளர் இராம.சத்திய மூர்த்தி தலைமையில் நெல்லை அலுவலத்தில் நடைபெற்றது. இதில் கோட்ட செயலாளர் சுப்பையா, மாவட்ட தலைவர் முத்துகுமார், பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் முத்துராஜ, இணைச் செயலாளர் பால விக்னேஷ், சத்சங்கம் அமைப்பாளர் அசோக்,
மற்றும் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப் பட்டன.
இந்த நிகழ்வில், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சேதுராமன், துறவியர் பெருமக்கள், ஆன்மீகப் பெரியவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். தாமிரபரணி தாய்க்கு சீர்செய்ய பொது மக்களுக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுக்கிறது.
இந்தச் சிறப்பான ஆன்மீகத் திருவிழாவை, கொரோனா விதிகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் பாதுகாப்புடன் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆடிப்பெருக்கு சீர்செய்ய விரும்பும் தாய்மார்கள், மாத்ரு சக்தி அமைப்பாளர் திருமதி கருப்பாயி அவர்களை 8344586656 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முன்பதிவுக்கு அசோக் (8610480723)கை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.