
ஒலிம்பிக் பற்றிய இன்றைய தகவல்கள்
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இந்திய விளையாட்டுகள் பெரும்பாலும் இன்றோடு பெரும்பாலும் முடிவடைகிறது. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு இது ஏமாற்றமளிக்கும் நாளாகும்.
கமல்பிரீத் கவுர் 64 மீ சிறந்த வீச்சுடன் பெண்கள் வட்டு எறிதல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
சீமா புனியா வட்டு எறிதல் போட்டியில் மேலே விளையாட தகுதி இழந்தார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணி 4-3 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெறும் என்ற நம்பிக்கையை உயிரோடு வைத்திருக்கிறது.
தகாஹாரு ஃபுருகவாவுக்கு எதிராக 6-4 என்ற கணக்கில் தோல்வியடைந்த அதனு தாஸ் வில்வித்தை விளையாட்டிலிருந்து வெளியேறினார்.
ஆண்களின் ஃப்ளைவெயிட் சுற்றில் கொலம்பியாவின் யூபர்ஜென் மார்டினெஸை எதிர்த்து அமித் பங்கால் 4-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தார்.
பிவி சிந்து 21-18, 21-12 ஆகிய நேர் ஆட்டத்தில் பேட்மிண்டன் அரையிறுதியில் தாய் சூ யிங்கிடம் தோற்றார்.
மகளிர் மிடில்வெயிட் காலிறுதியில் சீனாவின் லின் கியானுக்கு எதிராக பூஜா ராணி 5-0 என்ற கணக்கில் தோற்றார்.
இந்தியாவின் எம் ஸ்ரீசங்கர் தகுதி சுற்றில் 13 வது இடத்தைப் பிடித்த பிறகு ஆண்கள் நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதைத் தவறவிட்டார்.
கோல்ப் – அனிர்பன் லாஹிரி 28 வது இடத்திலும், உதயன் மானே 54 வது இடத்திலும் உள்ளனர்.
50 மீ ரைபிள் 3 – ஏ. மவுட்கில் 15 வது இடம் மற்றும் டி.சவந்த் 33 வது இடம்.
படகோட்டம் – கே.கணபதி மற்றும் வருண் தக்கார் 17 வது இடம்.