
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
31.07.2021 -ம் தேதியின்படி, தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பிற்காக இதுவரை ஆண்கள் 3293401 பேரும், பெண்கள் 3736687 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 257 பெரும் பதிவு செய்துள்ளனர். மொத்தமாக, 7030345 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.
இதில் 18 வயதிற்கும் கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் 1325333 பேரும், 19 முதல் 23 வயதுவரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 1788012 பேரும், 24 முதல் 35 வயது வரை உள்ள அரசு பணி வேண்டி காத்திருக்கும் நபர்கள் 2627948 பேரும், 36 வயது முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 1277839 மற்றும் 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11213 பேரும் மொத்தமாக 7030345 பேர் உள்ளனர்.
மேலும் கை,கால் குறைபாடுடையவர்களில் ஆண்கள் 70032 பேரும், பெண்கள் 36553 பேரும் மொத்தம் 106585 பேர் உள்ளனர். விழிப்புலனிழந்தோரில் ஆண்கள் 11458 பேரும், பெண்கள் 5176 பேரும் மொத்தமாக 16634 பேர் உள்ளனர்.
காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பட்டியலில் 9417 ஆண்களும், 4441 பெண்களும் உள்ளனர். மொத்தமாக அரசு வேலைவாய்ப்பில் பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை 137077 ஆக உள்ளது.
இதில் எட்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் எண்ணிக்கை 295660 ஆகவும், பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் எண்ணிக்கை 1426423 ஆகவும், டிப்ளமோ பட்டப் படிப்புகளை முடித்தவர்கள் எண்ணிக்கை 114915 ஆகவும் உள்ளது.
மேலும், இன்ஜினியர் முடித்தவர்கள் 270916 பேரும், மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் 1470 பேரும், சட்டம் படித்தவர்கள் 1987 பெரும் பதிவு செய்துள்ளனர்.