
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 800U 5G சிப்செட், 108எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போன். சைபர் டீல் மற்றும் எலக்ட்ரிக் கிராஃபைட் நிறங்களில் விற்பனைக்கு வரும் மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன்.
மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,499-ஆக உள்ளது. பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் மாடலின் விலை ரூ.22,999-ஆக உள்ளது.
குறிப்பாக பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளில் இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.5000 வரை தள்ளுபடி கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் சில சலுகைகள் இந்த சாதனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த மோட்டோரோலா எட்ஜ் 20 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் உடன் மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
டிஸ்பிளே: 6.7-இன்ச் OLED Max Vision டிஸ்பிளே (1,080×2,400 பிக்சல்கள்)
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 800U 5G எஸ்ஒசி
ரேம்:6ஜிபி/8ஜிபி
மெமரி:128ஜிபி
ரியர் கேமரா: 108எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 32எம்பி
5000 எம்ஏஎச் பேட்டரி
30 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
5ஜி, 4ஜி எல்டிஇ,
வைஃபை 6
ஜிபிஎஸ்
புளூடூத் வி5
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
மோட்டோரோலா எட்ஜ் 20 அம்சங்கள்
டிஸ்பிளே: 6.7-இன்ச் OLED Max Vision டிஸ்பிளே (1,080×2,400 பிக்சல்கள்)
144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
எச்டிஆர் பிளஸ் ஆதரவு
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஒசி
ரேம்: 8ஜிபி
மெமரி: 128ஜிபி
ரியர் கேமரா: 108எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி
பேட்டரி: 4000 எம்ஏஎச்
டர்போ பவர் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
5ஜி, 4ஜி எல்டிஇ
வைஃபை 6
ஜிபிஎஸ்
புளூடூத் வி5.2
யுஎஸ்பி டைப்-சி போர்ட்



