
இன்று (10/9/21) காலை சிறுபாலையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துகோன் நினைவாக உள்ள சுவரை சமூகவிரோதிகள் இடித்துள்ளனர். இதை அடுத்து சிறுபாலை மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுதந்திரப் போராட்ட வீரரும் பாளையக்காரருமான வீரன் அழகுமுத்துக்கோன் நினைவாக சிவகங்கை மாவட்டம் இளையான்குடிக்கு அருகில் உள்ள சிறுபாலை பகுதியில் சுவர் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. அதை ஒட்டி, யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த கொடி ஏற்றப் பட்டிருக்கும்.

இந்நிலையில் இன்று காலை வேறு சமுதாயத்தை சேர்ந்த விஷமிகள் இந்தச் சுவரை இடித்து உள்ளார்கள் என்று கூறி, அவர்களை கண்டித்து இன்று காலை சிறுபாலையில் உள்ள யாதவ சமுதாயத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.