
நாய்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நிகழ்வு சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கேரள மாநிலத்தில் திரிசூர் மாவட்டம் வாடானப்பள்ளி பகுதியில் வசித்து வருவர்கள் ஆகாஷ் மற்றும் அர்ஜூன்.
சகோதரர்களான இவர்கள் ஆசிட் என்ற நாயை செல்ல பிராணியாக வளர்த்து வருகின்றனர்.

90 கிட்ஸ்கள் திருமணத்திற்கு வரன் தேடி வரும் நிலையில், இவர்கள் சற்று வித்யாசமாக தங்கள் செல்ல பிராணிக்கு வரன் தேடியுள்ளனர். ஆனால் ஆசிடுக்கு வரன் அமைந்த பாடு இல்லை.
ஆனால், அவர்கள் தங்கள் முயற்சியை கைவிடவில்லை. அவர்களின் விடா முயற்சிக்கு பலனாய் ஆசிடுக்கேற்ற ஜோடி கிடைத்தது.
இதனால் மகிழ்ச்சியடைந்த அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனை அடுத்து அந்த ஜோடிக்கு ப்ரீ வெட்டிங்க் போட்டோ சூட் நடத்தினர்.

இதனை அடுத்து, இந்த ஜோடியின் திருமணத்தை நடத்த தனி ரெசார்ட் புக் செய்து மிக பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இந்த திருமண விழாவிற்கு உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இந்த திருமணம் கேரளாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.