ரயில் வரவிருப்பதால் சாலையின் இருபுறமும் தண்டவாளத்தை கடப்பதை தடுக்க வேலி போடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை தண்டவாளத்தை கடக்க காத்திருந்த ஆட்டோவில் இருந்த நபர் ஒருவர் தனது போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
அப்போது, ரயில்வே கேட் அருகில் முகத்தை துப்பட்டாவில் முகத்தை மூடிய படி நின்றுக்கொண்டிருந்த இளம்பெண், ரயில் அருகே வந்துவிட்டதை அறிந்து திடீரென கேட்டை கடந்து தண்டவாளத்தில் சென்று நிற்கிறார்.
இளம்பெண் கேட்டை கடந்து செல்வதை பார்த்த அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுநர், உடனே அப்பெண் பின்னாலே சென்று வலுக்கட்டயமாக இழுத்து வர, மின்னல் வேகத்தில் ரயில் கடந்து செல்கிறது.
காப்பாற்றப்பட்ட இளம்பெண் கதறி அழ சம்பவயிடத்தில் கூடிய பெண்கள் அவருக்கு ஆறுதல் செல்கின்றனர். வேலை இல்லாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு அப்பெண் தண்டவாளத்தில் சென்று நின்றதாக கூறப்படுகிறது.
தக்க சமயத்தில் இளம்பெண்ணை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை பாராட்டி வரும் பலர், பிரச்சனைகளுக்கு தற்கொலை தீர்வல்ல என வலியுறுத்தியுள்ளனர்
வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் ரயில் முன் நின்ற பெண்..! காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்#Younggirl #sucide #autodriver pic.twitter.com/IbYcUyCcHZ
— A1 (@Rukmang30340218) September 28, 2021