12 இலக்க UAN எண் என்பது இபிஎஃப்ஓ அமைப்பால் வழங்கப்படும் தனித்துவ எண்ணாகும். இதன் மூலம் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் பிஎஃப் பணம் உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்க முடியும்.
EPF-ஐ திரும்பப் பெறுவதற்கு எந்த நிறுவனத்தையும் சார்ந்து இல்லாமல், ஒரு நிறுவனத்திடம் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு PF கணக்குகளை மாற்றுவதில் இந்த எண் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த எண் பழைய கணக்குகளை மூடுவதற்கும், நிலுவைகளை மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இபிஎஃப்ஓ அமைப்பின் ஆன்லைன் சேவைகளின் நன்மைகளைப் பெற, UAN எண் ஊழியர்களின் KYC விவரங்களுடன் இணைக்கப்பட வேண்டும். எனினும், நீங்கள் இந்த UAN ஐ மறந்துவிட்டால் என்ன செய்வது? இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஊழியர்கள் இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஆன்லைனில் அதை மீட்டெடுக்கலாம்
EPFO UAN ஐ எப்படி மீட்டெடுப்பது?
அதிகாரப்பூர்வ EPFO போர்ட்டலில் உள்நுழைக https://unifiedportal-mem.epfindia.gov.in. முகப்புப்பக்கத்தில் கிடைக்கும் Know You UAN’ என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
உங்கள் EPFO கணக்குடன் இணைக்கப்பட்ட உங்கள் 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிட்டு சரிபார்ப்புக்காக பெட்டியில் காட்டப்பட்டுள்ளபடி கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்
அங்கீகாரத்திற்காக உங்கள் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
அடுத்து, பெயர், பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களைக் கொடுக்கும்படி கேட்கப்படுவீர்கள்.
கடைசி படி சரிபார்ப்புக்காக உங்கள் ஆதார், பான் அல்லது உறுப்பினர் ஐடியை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்.
தேவையான விவரங்களை உள்ளிட்டு, ‘Show My UAN’ என்பதைக் கிளிக் செய்யவும்
உங்கள் UAN திரையில் காட்டப்படும். ஸ்கிரீன் ஷாட் எடுப்பதன் மூலம் அல்லது எண்ணை குறிப்பாக எழுதுவதன் மூலம் அதைச் சேமிக்கலாம்.
உங்கள் UAN இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்று உங்களுக்குத் தெரிந்தால், செயல்படுத்தும் செயல்முறையை முடிக்க இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
அதிகாரப்பூர்வ EPFO உறுப்பினர் போர்ட்டலில் உள்நுழைக
முகப்புப்பக்கத்தில் கிடைக்கும் “Activate UAN” இணைப்பைக் கிளிக் செய்யவும்
யுஏஎன், உறுப்பினர் ஐடி, ஆதார் அல்லது பான் இடையே தேர்வு செய்யவும்
பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி (விருப்பம்) போன்ற தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்
சரிபார்ப்புக்காக பெட்டியில் காட்டப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்
சரிபார்ப்புக்காக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும்
OTP ஐ உள்ளிட்டு “Validate OTP and Activate UAN” என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் UAN செயல்படுத்தப்படும், மேலும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கடவுச்சொல் அனுப்பப்படும்.
செயல்படுத்தப்பட்டவுடன், நீங்கள் EPFO உறுப்பினர் போர்ட்டலில் உள்நுழைய உங்கள் UAN உடன் இந்த கடவுச்சொல்லைப் பயன்படுத்தலாம்