ஐ.பி.எல் 2021 – 04.10.2021
சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
இன்று துபாயில் நடந்த சென்னை டெல்லி அணிகளுக்கு இடையே நடந்த போட்டி எந்த அணி வெற்றி பெற்றாலும் அதனால் போட்டியில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத போட்டியாகும். புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியாக இருந்தபோதிலும் இது ஒரு குறைந்த ரன்கள் எடுக்கப்பட்ட ஆட்டமாகும்.
பூவா தலையா வென்ற டெல்லி அணி, சென்னை அணியை மட்டையாடச் சொன்னது. சென்னை அணியின் முதல் பாதி வீரர்கள் ரிதுராஜ் கெய்க்வாட் (13), ட்யூ ப்ளெசிஸ் (10), உத்தப்பா (19), மொயின் அலி (5) குறைவான ரன்கள் எடுத்து அவுட்டானார்கள்.
எட்டாவது ஓவரில் மொயின் அலி அவுட்டானதும் அம்பாடி ராயுடு ஆட வந்தார். அவர் ஆட்டமிழக்காமல் 55 ரன் எடுத்தார்.
சென்னை அணி இருபது ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 136 ரன் எடுத்தது. டெல்லி அணியில் அக்ஸர் படேல், அஸ்வின், ரபாடா மூவரும் சராசரியாக 5 ரன்னுக்கு குறைவாக ரன் விட்டுக் கொடுத்தனர்.
எளிதில் அடைய வேண்டிய இலக்கை டெல்லி அணி போராடிப் பெற்றது. சென்னை அணியின் ஸ்பின்னர்கள் ஜதேஜா, ஷர்துல் தாகூர், மொயின் அலி ஆகியோரும் அருமையாக வீசினர்.
இறுதியில் 19.4 ஓவரில், ஏழு விக்கட் இழப்பிற்கு 139 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தச் சுற்றில் இன்னமும் ஆறு போட்டிகள் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை அணியுடன் மோதுகிறது. இரண்டு அணிகளுக்கும் இந்த ஆட்டம் வாழ்வா சாவா போட்டியாகும்.