பாம்பின் வீடியோ ஓன்று சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், முட்டையை உடைத்துக்கொண்டு குட்டி பாம்பு வெளிவருவது தெரிகிறது.
முட்டையில் இருந்து வெளிவரும் பாம்பின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பலருக்கு பாம்பு மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தாலும், பாம்பு பற்றி தெரிந்துகொள்ள பலர் விருப்பம் தெரிவிப்பர். சமூகவலைதளங்களில் பாம்பு குறித்த பல வீடியோக்கள் அவ்வப்போது டிரெண்டாகி வருகிறது.
அந்த வகையில், தற்போது முட்டையில் இருந்து குட்டி பாம்புகள் வெளியாகும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
chesterzoo என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், chesterzoo பாம்பு முட்டைகளில் இருந்து குட்டி பாம்புகள் முதல் முறையாக வெளிவருவதை பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த chesterzoo, இந்த பாம்புகள் முட்டையிலிருந்து வெளிவருவது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது என்ற தலைப்பில் பதிவிட்டு உள்ளனர். இவை Rat Snakes என்று அழைப்பர்.
அந்த குட்டி பாம்புகள் மிகவும் அழகாக இருப்பதாகவும் பாம்பை பார்த்து பயப்படுபவர்கள் கூட இந்த வீடியோவைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைந்துவிடுவார்கள் எனவும் பலர் பதிவிட்டுள்ளனர்.