தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா .பின்
அதன்பின் அவர் தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்த முன்னணி நடிகையானார்.
மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ்வும் காதலித்து வந்ததாகவும், அவரையே திருமணம் செய்ததாகவும் செய்தி வெளியானது.
தன் கணவருடன் அவர் நெருக்கமாக உள்ள புகைப்படங்களையும் பதிவிட்டார். அதன் பின்னர் திரைப்படங்களில் இருந்து ஒதுங்கிய அவர், அவ்வபோது சோஷியல் மீடியாவில் தலைகாட்டி வந்தார். இந்நிலையில் தற்போது மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார் ஸ்ரேயா
இந்நிலையில், கடந்த வருடம் அவருக்கு 2020ம் வருடத்தில் அவர் கர்ப்பமடைந்துள்ளார். அதன்பின் அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால், இது வெளியே யாருக்கும் தெரியவில்லை.
தற்போது அந்த குழந்தையுடன் இருக்கும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பின்னரே ஸ்ரேயாவுக்கு குழந்தை பிறந்தது எல்லோருக்கும் தெரியவந்துள்ளது.
மேலும், 2020 ஊரடங்கில் உலகமே கொந்தளிப்பில் இருந்த போது எங்கள் உலகம் மாறியது.
கொரோனா போன்ற கடினமான சூழல் நிலவிய கடந்த ஆண்டு தனக்கு அழகான தேவதை பிறந்ததாக குறிப்பிட்டுள்ளார் ஸ்ரேயா. ஒரு வருடமாக வாய்திறக்காமல் திடீரென இந்த இனிப்புச் செய்தியை வாரி வழங்கியுள்ளார் ஸ்ரேயா.
எங்களுக்கு அப்போது அழகிய பெண் குழந்தை பிறந்தது. கடவுளுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்’என பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். ஸ்ரேயாவின் இந்த செய்தியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஸ்ரேயாவுக்கும் அவரது கணவருக்கும் அனைத்து தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.