பிளாக் ஷார்க் 4எஸ் அக்டோபர் 13 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சாதனத்தின் பின்புறத்தில் இடது டூ வலது என்ற முறையில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.
பிளாக் ஷார்க் 4 மற்றும் 4 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டன. நிறுவனம் பிளாக் ஷார்க் 4 எஸ் என்றழைக்கப்படும் வரிசையில் புதிய சாதனம் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் அக்டோபர் 13 ஆம் தேதி பிளாக் ஷார்க் 4 எஸ் என்ற சாதனம் அறிவிக்கப்பட உள்ளது. பிற்பகல் 3 மணிக்கு இந்த சாதனம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன் பகிரப்பட்டப்படி பின்புற பேனலில் கிடைமட்டம் அதாவது இடது டூ வலது என்ற அடிப்படையில் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகளை நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.
பிளாக் ஷார்க் 4 எஸ் ப்ரோ சாதனமும் பிளாக் ஷார்க் 4 எஸ் உடன் அறிமுகமாகும் என தெரிவிக்கப்படுகிறது. ப்ரோ வேரியண்ட் சாதனம் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சி உடன் வருகிறது.
சமீபத்திய ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் எஸ்ஓசி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. பிளாக் ஷார்க் 4 எஸ் 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 120 டபிள்யூ ரேபிட் சார்ஜிங் வசதியோடு வரும் என கூறப்படுகிறது.
பிளாக் ஷார்க் 4 எஸ் ப்ரோவில் டிரிபிள் கேமரா அமைப்பு இருக்க வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது. 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உடன் வருகிறது.
பிளாக் ஷார்க் 4 அம்சங்கள் குறித்து பார்க்கையில், 1080 x 2400 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் வருகிறது. 6.67 இன்ச் சாம்சங் இ4 அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
இந்த டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 720 ஹெர்ட்ஸ் ட்ச் மாதிரி விகிதம், எம்இஎம்சி தொழில்நுட்ப ஆதரவு மற்றும் 1300 நிட்ஸ் பிரகாசம் ஆகியவைகளுடன் வருகிறது.
ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 ப்ராசஸர் மற்றும் அட்ரினோ 650 ஜிபியூ உடன் வருகிறது. கூடுதலாக போன் 16 ஜிபி ப்ரோ மற்றும் 12 ஜிபி வரை எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.
கேமரா அம்சங்களை பொறுத்தவரை முன்புறத்தில், பிளாக் ஷார்க் 4 சாதனமானது 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா உடன் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கூடுதலாக 8 மெகாபிக்சல் அகல கோண லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உடன் வருகிறது.
முன்புறத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியுடனும் இந்த சாதனம் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜியோ யுஐ-ல் இயங்குகிறது. இது சியோமியின் எம்ஐயூஐ அடிப்படையாகக் கொண்டது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியோடு வருகிறது.
பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன்கள் சிறந்த கேமிங் சாதனங்களில் ஒன்றாக அறிமுகம் செய்ய உள்ளது. கேமிங் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் சமீபத்திய ஸ்மார்ட்போனாக பிளாக் ஷார்க் 4 இருக்கும். பிளாக் ஷார்க் 4 ப்ரோ கூகுள் ப்ளே கன்சோல் பட்டியலில் பென்ரோஸ் என்ற புனைப்பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதமே கூகுள் ப்ளே கன்சோலில் பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போன் காணப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் கைசர் என்ற குறியீட்டு பெயரிலும் பட்டியலில் காணப்படுகிறது. பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் வரும் எனவும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.