அண்ணாமலை செமத்தியான அடி!
‘சன்’- டிவி நிருபருக்கு அண்ணாமலை அவர்கள் “கோபாலபுரம்” என்று சொன்னவுடனே டென்ஷன் ஆகிடுச்சு!
“எங்க கட்சியில் யாரும் கோபாலபுரம் குடும்பத்துல இருந்து வரலீங்கண்ணா – யார் வேணாம் போட்டி போடலாம் – யார் வேணாம் மேல வரலாங்ணா”- என்ற உடனே சன் டிவி நிருபருக்கு பச்சை மிளகாயைக் கடிச்சா மாதிரி ஆகிவிட்டது!
அந்த முன்களம் அந்தப் பக்கம் கதறக் கதற இந்தப் பக்கம் அண்ணாமலை படு கூலாக TACKLE பண்ணினாரு!
“அட! நீங்க ஏண்ணா டென்சன் ஆகுறீங்க? 1949 ல் ஆரம்பிச்ச கட்சி 1970 ல இருந்து கார்பரேட்டா ஆகிடுச்சி!”
“அண்ணா! நீங்க உங்க கட்சித் தலைமையைக் கேளுங்கணா! ஐந்து தேர்தலா – ஒரே குடும்பம், அப்பா- மகன், அப்பா- மகள் இப்படியே குடும்பத்துக்கு உள்ளேயேதானேங்ணா தேர்தல்ல நிற்க வாய்ப்பு கிடைக்குது? தலைமைப் பதவின்னா முதல் பெரிய குடும்பத்தைத் தவிர உங்க கட்சிலேயே வேற குடும்பத்தை சேர்ந்தவர் வர முடியுமாங்ணா?”
“இந்தக் கேள்வி எல்லாம் நீங்க வேலை பார்க்கற சன் டிவி பாஸ் கிட்ட கேட்டு பதில் வாங்கிட்டீங்கனா பிரச்னை முடிஞ்சதுங்ணா”
“கோபாலபுரம்னா நீங்க ஏண்ணா டென்சன் ஆகிறீங்க? நீங்க அந்த கம்பெனில வேலை பார்க்கற PAID EMPLOYEE! நீங்க ஏண்ணா டென்ஷன் ஆவுறீங்க? போய்க் கேளுங்க – அவங்க கட்சித் தலைமையில் எத்தனை பேர் குடும்ப வாரிசுகளாவே தேர்தல்ல போட்டி போடறாங்க? ஏன், மத்தவங்களுக்கு வாய்ப்புக் கிடையாதா? – இதைக் கேட்டுகிட்டு வந்து பதிலை சொல்லிட்டீங்கன்னா மேட்டர் ஓவர்!”
நீ வெறும் கூலிக்கு வேலை பார்க்கறவன்- ‘கோபாலபுரம்’னு சொன்னால் நீ ஏண்டா டென்ஷன் ஆவுறே?- னு அது ஒண்ணுதான் கேட்கவில்லை!
செம! அண்ணாமலை! செம!
பாஜக இப்படிப்பட்ட தலைவரைத்தான் நீண்ட நாளாக எதிர்பார்த்து ஏங்கி இருந்தது!
நான் இதற்கு முன்பு இருந்தவர்கள் எவரையும் குறை சொல்லவில்லை!
அவர்கள் ரொம்ப நாகரிகமாக – செந்தமிழில் – “அதாவது பாஜக எடுத்திருக்கும் இந்த நிலைப்பாடானது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எங்களது தேர்தல் அறிக்கையில் உள்ளது என்பதை சகோதரருக்கு மிகவும் அன்போடு சுட்டிக் காட்டுகிறோம்!”- இப்படி இழுத்து இழுத்து தமிழில் “இசை” யாகப் பேசுவதெல்லாம் இந்த Partial Information Media Propaganda Service (PIMPS) ஆசாமிகளுக்குப் புரியாது!
“சொல்லிருக்கோம்ல இதே மேட்டரை – எங்க அறிக்கைல? படிங்ணா! படிக்காம வந்து கேள்வி கேட்டா எப்படிங்ணா?”- என்று ‘அண்ணா’- ‘அண்ணா’ னு சொல்லியே கோழியைக் கழுத்தில் ஈரத்துண்டைப் போட்டு அறுப்பது மாதிரி நறுக்கறார் பார் அண்ணாமலை!
அவர்தான் இவங்களுக்கு சரிப்படுவார்!
விரலை ஆட்டி ஆட்டி எக்கணும் இவிங்களை!
“கடந்த பல வருடங்களா உங்க டெபுடி எடிட்டர் உட்பட உங்களை மாதிரி ஜர்னலிஸ்ட் எல்லாம் பாரதப் பிரதமர் மோடியைப் பற்றி என்னென்ன டீவீட் போட்டீங்கனு லிஸ்ட் நாங்களும் வச்சிருக்கோங்ணா!”-
செம ரிவிட்டு!
#அண்ணாமலைIPS #BJP4Tamilnadu
- கருத்து: முரளி சீதாராமன்
கோபாலபுரத்தில் பிறந்தீர்களா??? : அண்ணாமலை!
அண்ணாமலையின் நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பை பார்க்காதவர்கள் அவசியம் பார்க்கவும் .
அந்த சந்திப்புலிருந்து சில:
1, கல்யாணராமன் ஜி கைது பற்றி: எடப்பாடி காலத்தில் போட்ட FIRகளை தூசி தட்டி, வாரண்ட் ஏதுமில்லாமல், நள்ளிரவில் சென்று கைது செய்ததையும், பாஜக மகளிரை தாக்கியதையும் சும்மா விடப்போவதில்லை என்கிறார் அண்ணாமலை. பத்திரிக்கையாளர் (சன் டிவி?), “விபச்சாரி என்றெல்லாம் கல்யாணராமன் பதிவிடுவது எப்படி சரி?” என்று கேட்க, “கடந்த 20 வருடங்களில் உங்கள் தலைவர் என்னவெல்லாம் பேஐயிருக்கிறார் என்பதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். அதை பார்த்த பின் இது பற்றி பேசலாம். யாரேனும் அவர் பேசியது தவறு என்றால், அதற்கு அவதூறு சட்டப்படி வழக்கு தொடுக்கலாம். மேலும், கல்யாணராமனை அந்த விவகாரத்தில் கூட கைது செய்யவில்லை. பழைய (2018…) விவகாரங்களில் கைது செய்திருக்கிறார்கள் வாரண்ட் இல்லாமல். இதை சும்மா விட மாட்டோம்” – அண்ணாமலை.
2, சந்தை விலையை விட பல மடங்கு விலைக்கு மின்சாரம் வாங்கும் திட்டம் ஒரு திமுக உறுப்பினருக்கு பயன்படும் வகையில் உள்ள ஊழல் திட்டம். ஒரு sick நிறுவனத்திற்கு மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்து அதை லாபமுள்ள நிறுவனமாக மாற்றும் ஊழல் திட்டம். அந்த நிறுவனம், திமுக பெயர்கள் பின்னர் வெளியிடப்படும். இது ட்ரெய்லர் தான் என்கிறார் அண்ணாமலை! (இனியும் அந்த திட்டத்தை கையிலெடுக்கும் தைரியம் இருக்குமா விஞ்ஞான ஊழல் கட்சிக்கு?).
3, “ஒத்த ஓட்டு பாஜக என்று பொய்யை காட்ட சன் டிவி காரர் ஏன் துபாய் சென்றார்” என்று சன் டிவியின் கேடுகெட்ட தனத்தை எக்ஸ்போஸ் செய்தார்.
4, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வென்ற 391 உறுப்பினர்களும் & தோற்ற உறுப்பினர்களும் கௌரவிக்கப்ப்டுவார்கள்.
5, பாஜக கார்ப்பரேட் கம்பெனி கிடையாது கோபாலபுரத்தைப் போல. துள்ளிக் குதித்த சன் டிவி நபரை, “நீங்க ஏன் டென்ஷன் ஆவறீங்க? நீங்க கோபாலபுரத்திலயா பொறந்தீங்க?”ன்னு சொன்னது top class!
அண்ணமலை பத்திரிக்கை எடுபிடிகளை கையாளுவதை பார்ப்பது – பரம திருப்தி!!!
- செல்வநாயகம்
45 நிமிட பேட்டி சலிப்பு தட்டாமல் குறும்படம் பார்த்த அனுபவம் போன்றது.
1)ஹூரோ என்ட்ரி (திமுக வை மண்ணை கவ்வ வைத்த பாஜக தாமரை சின்னம் வேட்பாளர் பெண்மணி) போடுவியா Post card!
2)வில்லன் ஃபைட்(நீங்க டெண்டர் விடு அப்புறம் இருக்கு ஊழல் தகவல்கள்)
3).சாங் (தீபாவளிக்கு சிவகாசி பட்டாசு போட்டே ஆகனும் !முழு ஆதரவு பாஜக)
4)கிளைமேக்ஸ் தூள்.(உடம்பை வேணுமுனா அரெஸ்ட் பண்ணலாம்எண்ணங்கள் விரிந்து கொண்டே போகும்…காவல்துறை மீதே வழக்கு தொடுக்க உள்ளோம்)
5)காமெடி(வேலை வெட்டி இல்லாமல் ஒருத்தரை துபாய் வரைக்கும் அனுப்பி அட்டைல எழுதி கொடுத்தது!)
6).End card (வாங்குன காசுக்கு மேல கூவி உடம்பை கெடுத்து கொள்ளாதே)
குறும்பட கருத்து: உழைச்சு தின்னுங்கடா!
- கணேஷ்குமார்