இராணுவத்தில் உதவிக்காக ரோபா நாய்கள்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
robo dog
robo dog

நாலு கால் ரோபோக்கள், வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றன. காடு, மேடு, சாலை, படிகள் என, எதிலும் ரோபோ நாய்களால் வேகமாக பயணிக்க இப்போது முடியும்.

அப்படிப்பட்ட ரோபோ நாய்களை தற்போது, கோஸ்ட் ரோபாடிக்சும், தயாரிக்கிறது.அண்மையில். அமெரிக்காவின் கொலம்பஸ் நகரில் வருங்கால ராணுவ படைத்திறன் கண்காட்சி நடந்தது.

அதில், ‘விஷன்- 60’ என்ற ரோபோ நாயின் முதுகில் ஒரு துப்பாக்கியை பொருத்தி, அதிரவைத்துள்ளனர் கோஸ்டின் விஞ்ஞானிகள். ‘ஸ்பர்’ என்ற இந்த சிறப்பு துப்பாக்கியால் 1.2 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை சுட்டுவீழ்த்த முடியும்.

விஷன்- 60, நாயால் தானாகவே இயங்க முடியும் என்றாலும், சிப்பாய்களுக்கு போர்களத் துணையாகத்தான் அது உருவாக்கப்பட்டிருக்கிறது.

எனவே, அதன் கட்டுப்பாடு சிப்பாய்களின் கையில்தான் இப்போதைக்கு இருக்கும். துப்பாக்கியின் எடை 7.7 கிலோ. அதன் சிறப்பம்சங்களில் ஒன்று தெர்மல் கேமிரா.

இதன் உதவியுடன் இரவிலும் தொலைதுார இலக்கை துல்லியமாக தாக்க முடியும். ஆம், இந்த ரோபோ துப்பாக்கிக்கு ‘நைட் விஷன்’ எனப்படும் இரவுப் பார்வைத் திறன் உண்டு.

அதுமட்டுமல்ல, ரோபோ நாயின் உடல், துப்பாக்கி போன்றவையின் வெளிப்புறம், எதிரியின் இரவுப் பார்வைக் கருவிக்குத் தெரியாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தோட்டா சீறிப்பாயும்போது, துப்பாக்கி சற்று பின்னோக்கித் தள்ளப்படுமே? அதை சமாளிக்கும் எதிர்விசைத் திறனும் ரோபோ நாய்க்கு உண்டு என்கிறது கோஸ்டின் விஞ்ஞானிகள் குழு.

கண்காட்சியில் வைக்கப்பட்டதற்கே பல விமர்சனங்களை சம்பாதித்துள்ளது இந்த ரோபோ நாய். இதற்கு, தானே முடிவெடுத்து சுடும் திறன் தரப்பட்டால் என்ன ஆகும் என்பதை நினைத்தாலே கலக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.