கோழி பிடிக்கச் சென்ற பூனை.. தாக்கிய கோழி! வைரல்!

அடடே... அப்படியா? உலகம்
cat
cat

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர்.

சில வீடியோக்களை பார்த்து நம்மால் சிரிப்பை நிறுத்த முடியாத நிலை கூட ஏற்படுகின்றது. சில வீடியோக்களை பார்த்தால் அதிக அளவில் ஆச்சரியமும் ஏற்படுகின்றது. இதுபோன்ற ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.

இந்த வீடியோவில் ஒரு பூனையும் கோழிகளும் சண்டை இடுவதைக் காண முடிகின்றது. இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் (Social Media) மக்கள் அதிகமாக விரும்பிப் பார்த்து வருகின்றனர்.

திறந்த வெளியில் சில கோழிகள் அங்கும் இங்கும் சென்று கொண்டிருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. கோழியை வேட்டையாடும் எண்ணத்தோடு அலையும் ஒரு பூனையையும் இந்த வீடியோவில் காண முடிகின்றது.

சில கணங்கள் காத்திருக்கும் பூனை, திடீரென ஒரு கோழியின் மீது பாய்ந்து அதன் கழுத்தை வாயினால் கவ்விப் பிடிக்கின்றது.

வீடியோவில் இதற்குப் பிறகு காணப்படும் காட்சிகளைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பூனை கோழியைத் தாக்கியவுடன், அருகில் நின்ற மற்றொரு கோழி பூனையைத் தாக்கியது. அந்த கோழி மீண்டும் மீண்டும் பூனையைத் தாக்குவதால், பூனை வேறு வழி இல்லாமல் பின்வாங்க வேண்டி வருகிறது.

இரு கோழிகளும் செல்லத் தொடங்கியவுடன் பூனை (Cat), மற்ற கோழியை பிடிக்க பின்னாலிருந்து தாக்குகிறது. ஆனால், இப்போதும் மற்றொரு கோழி பூனையைத் தாக்கி அதை விலக வைக்கிறது. மொத்தத்தில், இரு கோழிகளும் சேர்ந்து பூனையை அஞ்சி ஓட வைக்கின்றன.

பூனை மற்றும் கோழிகளின் இந்த சண்டையின் வீடியோ Funny Videos / Viral Videos என்ற பெயரில் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோ இதுவரை 1.73 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. ஏராளமான நெட்டிசன்கள் இதற்கு கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.