ஜலக்கீரிடை செய்யும் பாம்புகள்! வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? சற்றுமுன்
snake 1 4
snake 1 4

இணையத்தில் பலவித வீடியோக்கள் தினமும் வலம் வருகின்றன. இவற்றில் சில வீடியோக்களுக்கு மக்களின் பேராதரவு கிடைத்து விடுகிறது.

அதுவும் கடந்த சில நாட்களாக விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

இரண்டு பாம்புகள் (Snakes) ஒன்றுடன் ஒன்று சுழன்று கொண்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது, இதை சமூக ஊடக பயனர்கள் ‘காதல் நடனம்’ என்று அழைத்து வருகின்றனர்.

ஆனால் இந்த பாம்புகளுக்கு இடையில் இருப்பது காதலா? குரோதமா? இவை அன்பால் பின்னிப்பிணைந்துள்ளனவா? அல்லது சண்டையிடுகின்றனவா?

‘ஹெலிகாப்டர்_யாத்ரா’ என்ற பயனரால் சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ 14,000க்கும் மேற்பட்ட லைக்குகளுடன் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் (Video), சுற்றிலும் பசுமை சூழ்ந்திருக்க, சுமார் எட்டு அடி நீளமுள்ள இரண்டு பாம்புகள் தண்ணீரில் மெதுவாக சுற்றிக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.

பாம்புகள் ஒரு கணம் நின்று, ஆக்ரோஷமாக ஒன்றையொன்று சுழற்றி சுழற்றத் தொடங்கி, ஆவேசமாக தண்ணீரைத் தெறிக்கத் துவங்குகின்றன.

இந்த வீடியோ பார்வையாளர்களின் கற்பனை குதிரைகளை வேகமாக ஓட வைத்துள்ளது. இரண்டு பாம்புகளும் இனச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனவா, இது ஏதாவது நடனத்தின் வடிவமா அல்லது இவை சண்டை இடுகின்றனவா? என நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பல சமூக ஊடக (Social Media) பயனர்கள் இது ஆண் மற்றும் பெண் பாம்பிற்கு இடையிலான ஒரு அழகான நடனம் என்று கூறுகின்றனர். ஆனால் சிலரோ, இது காதலும் அல்ல நடனமும் அல்ல, இரு பாம்புகளும் கடுமையான சண்டையில் ஈடுபடுள்ளன என உறுதியாகக் கூறுகிறார்கள்.

சிலரோ, இந்த வீடியோவில் காணப்படுவது, பாம்புகளின் இனச்சேர்க்கையோ நடனமோ அல்ல, இது ஒரே வகையைச் சேர்ந்த இரு ஆண் பாம்புகளுக்கு இடையிலான மல்யுத்தப் போட்டி என கமெண்ட் செய்துள்ளார்கள்.

எப்படி இருந்தாலும், இந்த பாம்புகளின் வீடியோ நெட்டிசன்களை மகிழ்வித்து அவர்களின் கற்பனையையும் அதிகரித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.