
தீபாவளி என்றாலே குதூகலமும், கொண்டாட்டமும் நிறைந்திருக்கும். தீபாவளிக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பிருந்தே அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்ய தொடங்கி விடுவோம்.
புது துணி, பலகாரங்கள், நகைகள், பட்டாசுகள் என நமது ஷாப்பிங் லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். இதற்கு ஏற்றாற்போல எண்ணற்ற புதுவித தீபாவளி விளம்பரங்களை கொண்டு, நம் மனதை கட்டிப்போட்டு விடுவார்கள். ஒவ்வொரு வருடமும் சில நிறுவனங்களின் விளம்பரங்கள் முக்கியமான பேசுபொருளாக மாறிவிடும்.
அந்த வகையில் இந்த வருடம் கொரோனாகால சூப்பர் ஹீரோக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அமேசான் நிறுவனத்தின் இந்த தீபாவளி விளம்பரம் வெளியாகியுள்ளது. இப்போது இது நெட்டிசன்கள் இடையில் வைரலாகி வருகிறது. இந்த விளம்பரத்தில் உள்ள சிறப்பம்சத்தை பற்றி இனி பார்க்கலாம்.,
இந்தியர்கள் அனைவரும் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது தீபாவளி. கொரோனாவின் இரண்டாம் அலைக்கு பின் நாம் அனைவரும் கொண்டாட போகும் இந்த தீபாவளி, பலரின் வாழ்விலும் புத்துணர்வை தர கூடியதாக இருக்கும். கொரோனாவில் நாம் அடைந்த இழப்புகளை ஏதோ ஒரு வகையில் மறக்க செய்து நம்பிக்கை தரும் விதத்தில் இந்த தீபாவளியை கொண்டாட பலரும் தயாராக உள்ளோம்.
இதை நினைவில் வைத்து அமேசான் நிறுவனம் மிக சிறந்த தீபாவளி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரமானது கொரோனா காலங்களில் முகம் தெரியாத நபர்களுக்கு உதவிய சூப்பர் ஹீரோக்களுக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு அம்மாவும் மகனும் காரில் உரையாடி கொண்டிருப்பது போன்று தொடங்குகிறது.
அப்போது அந்த மகன் நாம் எங்கு செல்கிறோம், யாரை பார்க்க செல்கிறோம் என கேட்டு கொண்டே இருக்கிறான். அதற்கு அந்த தாய் நமக்கான “ஸ்பெஷல் ஃபேமிலி” ஒன்றுள்ளது. அவர்களை தான் பார்க்க செல்கிறோம் என்று கூறுகிறார். இதை கேட்ட மகனுக்கு ஆர்வம் தாங்கவில்லை. எதாவது க்ளூ தருமாறு தனது அம்மாவிடம் கேட்கிறார்.
அந்தநேரத்தில் அவர்களின் கார் ஒரு வீட்டிற்கு முன் நிற்கிறது. அங்கு சென்று வீட்டில் காலிங் பெல்லை அடிக்கின்றனர். அப்போது அந்த அம்மா, “உனக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா வந்த போது இந்த வீட்டில் இருக்கும் நபர் தான், உனக்கான ஹாஸ்பிட்டல் பெட்டை ஏற்பாடு செய்து கொடுத்தார்” என கூறிகிறார். ஒருசில நொடிகளில் அந்த வீட்டின் கதவு திறக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு பெரியவர் வெளியே வருகிறார்.
அவர் உடனே அந்த பையனை கட்டி தழுவுகிறார். அந்த பையன் அவருக்காக அமேசானில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட பரிசு ஒன்றை அவரிடம் கொடுத்து தீபாவளி வாழ்த்துக்களை சொல்கின்றார்.
இந்த விளம்பரம் கொரோனா காலங்களில் யாரென தெரியாவதர்களுக்கு உதவிய அன்புள்ளம் கொண்ட பல சூப்பர் ஹீரோக்களுக்கு சமர்ப்பணம் என்பதை உணர்த்துகிறது.
அக்டோபர் 28 ஆம் தேதி, வெள்ளிக்கிழமையில் வெளியான இந்த விளம்பரம் நெட்டிசன்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இதன் ட்விட்டர் பக்கத்தில் 1 மில்லியன், பேஸ்புக்கில் 5 மில்லியன் நெட்டிசன்களும் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். இந்த வீடியோவை ஷேர் செய்து வரும் நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து பல்வேறு கமெண்ட்ஸ்கள் செய்து வருகின்றனர்.
Some people are #specialfamily and this year don’t forget to #deliverthelove to them yourself. Here’s a heartwarming story from us!
— Amazon India (@amazonIN) October 28, 2021
Tell us about your #SpecialFamily in the comments section. pic.twitter.com/ZfOExx64p3