
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளராக தற்போது ரவிசாஸ்திரி உள்ளார் என்பதும் தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி உடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்படுவார் என்றும் பிசிசிஐ தலைவர் கங்குலியின் ஆதரவு அவருக்கு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனை அடுத்து சமீபத்தில் ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிசிசிஐ சற்று முன் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில்
தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்தவுடன் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ராகுல் டிராவிட்டுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
🚨 NEWS 🚨: Mr Rahul Dravid appointed as Head Coach – Team India (Senior Men)
— BCCI (@BCCI) November 3, 2021
More Details 🔽