காலநிலை மாற்றம் மற்றும் தீவிர வானிலை நிலைமைகள் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பல தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் பூமி ஒரு பெரிய இயற்கை பேரழிவை நோக்கி செல்கிறது என்று எச்சரித்துள்ள விஞ்ஞானிகள், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஒரு ‘பேரழிவுக்கு’ வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
உலகின் முன்னணி அறிவியல் இதழ்களில் ஒன்றான நேச்சர் (Nature), சமீபத்தில் விஞ்ஞானிகளை பங்கேற்பாளர்களாகக் கொண்டு ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. 2100 ஆம் ஆண்டு முடிவதற்குள் பூமி ஒரு பேரழிவை நோக்கிச் செல்கிறது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
உலகெங்கிலும் உள்ள 234 விஞ்ஞானிகளால் காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழுவான IPCC-ன் காலநிலை மாற்ற அறிக்கை தயாரிக்கப்பட்டது.
அதன்படி கொலம்பியாவின் மெடெல்லின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளில் ஒருவரான பாவ்லா ஏரியாஸ், உலகம் வேகமாக மாறி வருவதாகவும் அதன் வளங்கள் சுரண்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மாறிவரும் பருவ மழையினால் உலகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் புவி வெப்பமடைதல் அதிகரித்து வருவதாகவும், கடல் மட்டமும் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உயரும் வெப்பநிலை மற்றும் மாசுபாட்டிற்கு ஏற்ப உயிரினங்களுக்கு வாழ தகுதியான சூழல் கடினமாக இருக்கும் எனவும்.
காலநிலை மாற்றத்தை மாற்றியமைக்க சர்வதேச அரசாங்கங்கள் மெதுவான வேகத்தில் நகர்வதாகவும், இது எந்த தீர்வுக்கும் வழிவகுக்காது என்றும், மக்கள் இடம்பெயர்ந்து செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே நேச்சர் நடத்திய ஆய்வில், பூமியைக் காப்பாற்றவும் காலநிலை மாற்றத்தை மாற்றவும் மனிதர்களுக்கு போதுமான நேரம் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பூமி அழிந்துவிடும் என்று 40 சதவீத விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2100-ம் ஆண்டுக்குள் உலகில் பல பருவநிலை பிரச்சனைகள் ஏற்படும், பருவமழை, மேக வெடிப்பு, சுனாமி, அதிக வெப்பம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் நாடுகள் அழிந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உணவு, தண்ணீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளால் மனித இனம் சிரமப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.. இந்த நூற்றாண்டின் இறுதியில் பூமியின் வெப்பநிலை சுமார் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இது பாரிஸ் ஒப்பந்தத்தின்படி கணிக்கப்பட்ட வெப்பநிலையை விட கணிசமாக அதிகமாகும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பருவநிலை மாற்றம் உலகில் பேரழிவு போன்ற சூழலை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகத் தலைவர்களும் முக்கிய நாடுகளும் பசுமையான வாழ்க்கை முறையை வழிநடத்துவதாக வாக்குறுதிகளை மட்டுமே அளித்துள்ளன, ஆனால் இன்னும் அதை வழங்கவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகள் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதாக உறுதியளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நாடுகள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மனித இனம் அழியும் தருவாயில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்