ஃபேஸ்புக் வாட்ஸ்அப் இந்த செயலியை பயன்படுத்தும் பயனர்களின் தேவை மற்றும் பாதுகாப்பு கருதி வாட்ஸ்அப் நிறுவனமும் அவ்வப்போது புதிய அப்டேட்களை செய்து வருகின்றது.
சமீபத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.21.23.1-ஐ சமர்ப்பித்தது. புதிய மற்றும் வரவிருக்கும் வாட்ஸ்அப் அப்டேட் அம்சங்களைக் கண்காணிக்கும் ஆன்லைன் தளமான WaBetaInfo-வின் அறிக்கையின்படி, delete for everyone அம்சத்தில் வரக்கூடிய புதிய மாற்றங்கள் பற்றி கூறி இருக்கிறது.
தற்போது வாட்ஸ்அப்பில் இயங்கும் குரூப்களின் அட்மின்களுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, delete for everyone போன்ற புது அனுமதியினை குரூப் அட்மினுக்கு அளித்துள்ளது. ஏற்கனவே உள்ளது போல இல்லாமல் சற்று கூடுதல் தொழில்நுட்பத்துடன் காணப்படுகிறது.
அதன்படி வாட்ஸ்அப் தனது பயனாளர்களுக்கு தனிப்பட்ட அல்லது குழுவில் உள்ள ஒரு செய்தியை நீக்குவதற்கு ஒரு மணிநேரம் 8 நிமிடம் மற்றும் 16 நொடிகளுக்குள் அனுமதி அளிக்கப்படுகிறது.
அந்த செய்தி நீக்கிய உடன் “செய்தி நீக்கப்பட்டது” என்ற தகவலும் வெளியாகும். இவை அனைத்தும் அந்த நேரத்திற்குள் துல்லியமாகத் இருந்தால் சாத்தியம் என்றும் கூறியுள்ளது. அந்த செய்தியை குழு உறுப்பினர்கள் படிக்காத பட்சத்தில் இவை வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு செல்லும் என்றும் வாட்ஸ்அப் கூறியுள்ளது.
மேலும், “Community Invite Link” புதிய வசதியும் வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு வழங்கப்பட்டள்ளது. இதன்மூலம் வாட்ஸ்அப் குரூப்பில் சேர மற்ற பயனர்களை அவர்கள் அழைக்கலாம்.
இவ்வாறு வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு சில தனி கருவிகள் வழங்கப்பட்டிருக்கும், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களே கட்டுக்குள் வைத்திருக்கின்றன.