திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி இன்று காலை கோயில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்கக்கொடி மரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, கொடியேற்று விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.எனவே, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் அடையாள அட்டை பெற்ற உள்ளூர் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
வரும் 19ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி எதிரில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்படும்.