நிலத்தில் விளைந்த கொரோனாக் காய்! அதிர்ந்த விவசாயி! வைரல்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
Cucumber3
Cucumber3

ஒடிசாவில் விவசாயி ஒருவர் கொரோனா தோற்றத்தில் இருக்கும் பொருள் ஒன்றை கண்டுபிடித்தது பெரிய வைரலாகி உள்ளது.

ஒடிசா மாநிலம் நபரங்கபூர் பகுதியை சேர்ந்தவர் ரவி கிரண். அந்த பகுதியில் நேற்று விவசாய வேலை ஒன்றிற்காக சென்றவர்தான் அந்த கொரோனா வடிவ பொருளை கண்டுபிடித்து இருக்கிறார்.

தரையில் கொரோனா போலவே தோற்றம் கொண்ட வட்ட வடிவிலான பொருள் ஒன்று கிடந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளை ரவி கிரண் அழைத்துள்ளார்.

அந்த விவசாய நிலம் சந்திர பூஜாரி என்பருக்கு சொந்தமான நிலம் ஆகும். அந்த பகுதியில் அவர் கடந்த முறை வெள்ளரிக்காய் விளைய வைத்துள்ளார்.

இந்த நிலையில் அனைத்து வெள்ளரிக்காய்களையும் அறுவடை செய்த நிலையில் தரையில் ஒரு வெள்ளரிக்காய் மட்டும் புதைந்து கிடந்துள்ளது. இதைத்தான் அங்கு விவசாய பணிக்காக சென்ற ரவி கிரண் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்

பார்க்க கொரோனா போலவே இந்த வெள்ளரிக்காய் இருந்துள்ளது. ஒன்று மட்டுமின்றி அருகிலேயே நிறைய இப்படி வெள்ளரிக்காய் கொரோனா வடிவத்தில் காணப்பட்டுள்ளது.

Cucumber
Cucumber

கொரோனா பரவல் தொடங்கிய போதே அதன் மேக்ரோ தோற்றத்தை ஆய்வாளர்கள் வெளியிட்டு இருந்தனர். உருண்டையான பந்து போன்ற வடிவத்தில் முற்கள் கொண்ட அதன் தோற்றத்தை வெளியிட்டு இருந்தனர்.

அந்த விவசாய நிலத்தில் விவசாயிகள் கண்டுபிடித்த வெள்ளரிக்காயும் இதே தோற்றத்தில்தான் காணப்பட்டு இருக்கிறது. இதையடுத்து விஷயம் கேட்டு விவசாயிகள் பலர் அருகாமை பகுதிகளில் இருந்து அந்த இடத்திற்கு வந்துள்ளனர்.

பல உள்ளூர் ஆட்களும் அங்கே வந்து கொரோனா போன்று இருக்கும் வெள்ளரிக்காயை வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளனர்.

Cucumber1
Cucumber1

இந்த புகைப்படம் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்த வெள்ளரிக்காய் ஏன் இப்படி கொரோனா போல தோற்றம் அளிக்கிறது என்று தெளிவாக தெரியவில்லை.

ஏதாவது பூச்சி கொல்லி மருந்தால் இப்படி ஆகி இருக்கலாம். அல்லது மரபணு மாற்றம் காரணமாக இப்படி ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.