
பலரது வீட்டில் நாய்கள் மிகவும் செல்லமாகவும், குடும்பத்தில் ஒரு உறுப்பினரை போலவுமே வளர்க்கப்பட்டு வருகின்றன.
நாய்களின் சேட்டைகள் அடங்கிய வீடியோக்கள் அவ்வப்போது ஆன்லைனில் ஷேர் செய்யப்பட்டு சோஷியல் மீடியாக்களில் வைரலாகி பலரை மகிழ்விக்கின்றன.
வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளை போலவே நாய்களும் நம்மிடையே பாசத்தையும், அரவணைப்பையும் கூடுதலான கவனிப்பையும் எதிர்பார்க்கின்றன. ஒருவேளை அதை நம்மால் சரியாக கவனிக்க முடியாவிட்டால் அதனுடன் நேரத்தை செலவழிக்கா விட்டால் வாயில்லா பிராணியாக இருந்தாலும், மனிதர்களை போலவே கவலை மற்றும் ஏக்கத்தை முகத்தில் மற்றும் செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்துகின்றன.
இதனிடையே மிகவும் பொறுமைசாலியாக இருக்கும் ஒரு நாயின் வீடியோ சமீபத்தில் நெட்டிசன்களால் சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்டு மிகவும் வைரலாகி வருகிறது. முதலில் டிக்டாக்கில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகிய இந்த வீடியோ, தற்போது கோடிக்கணக்கான யூஸர்கள் பயன்படுத்தி வரும் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ பார்ப்பவர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.
“அவன் மிகவும் பொறுமையாக காத்திருந்தான்” என்ற கேப்ஷனுடன் ஷேர் செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட வீடியோவில் ஒருவர் சோஃபாவில் படுத்திருப்பதையும் அவரது செல்ல நாய் பொறுமையாக அவருக்கு அருகில் அமர்ந்திருப்பதையும் முதலில் பார்க்க முடிகிறது.
பின் சில வினாடிகளில், அவர் தனது மடியில் இருக்கும் லேப்டாப்பை எடுத்து தூர வைக்கிறார். இதற்காக தான் காத்திருந்தேன் என்ற மைண்ட் வாய்ஸ் கொண்ட அந்த நாய் உடனடியாக அவர் மார்பின் மீதேறி இரு முன்னங்கால்களையும் வைத்து கொண்டு கட்டிப்பிடித்தபடி தலையை சாய்த்து கொள்கிறது.
pubity என்ற இன்ஸ்டா பேஜில் ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த க்யூட் வீடியோ, இதுவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்கள், 2,100-க்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்களை குவித்துள்ளது.
“நான் இந்த தருணத்திற்காக காத்திருந்தேன்” என்பது போல் அந்த நாயின் செயல் இருப்பதாக பல நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து உள்ளார்கள்.
மற்றொரு இன்ஸ்டா யூஸர் “நான் என் பூனைக்கு இந்த வீடியோவைக் காண்பிப்பேன், இதன் மூலம் மேலும் சில பழக்கங்களை அது கற்று கொள்ளும் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.
மற்றொரு யூஸர் “Laptop to lapdog” என்று வேடிக்கையாக குறிப்பிட்டு உள்ளார். சில நாட்களுக்கு முன்பு, ஒரு அழகான குட்டி நாய் லேப்டாப்பை திறந்து உரிமையாளர் வேலை செய்ய முயலும் போது உடனுக்குடன் அதை க்ளோஸ் செய்த வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.