பழசு சரியில்லே! புதிய பேருந்துகள் வாங்க ‘ஏற்பாடு’: போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன்!

Published:

rajakannappan
Rajakannappan: Fil Picture

போக்குவரத்துத் துறையில் பழைய பேருந்துகள் பயன் படுத்துவதால் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே புதிய பேருந்துகள் வாங்க அரசு ஏற்பாடுகள் நடைபெறுகிறது என்று மதுரை விமான நிலையத்தில் போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழக போக்குவரத்து துறை ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்துக் கூறுகையில்…

போக்குவரத்துத் துறையில் கடன் சுமை குறித்த கேள்விக்கு… போக்குவரத்துத் துறையில் சீர்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி கடந்த ஆறு மாத காலமாக போக்குவரத்துத் துறையை ஒழுங்குபடுத்தி நல்லமுறையில் செயல்படுகிறது. போக்குவரத்து ஆணையரின் தலைமையில் நிர்வாகம் நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது…என்றார். 

மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் பேருந்துகள் பாதிப்பு குறித்த கேள்விக்கு…

அது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ராமநாதபுரம் செல்வதாகவும் தமிழக அரசு துரிதமாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். சென்னையில் வெள்ள பாதிப்பில் பேருந்துகள் பாதிப்படையவில்லை. தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. எந்த வெள்ளம் வந்தாலும் ,எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளது.. என்று கூறீனார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

பேருந்துகள் நிலை குறித்து பேருந்து ஓட்டுனர்கள் வெளியிட்ட வீடியோ குறித்த கேள்விக்கு…

புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும, பேருந்து பழுது பார்க்க நிதி உதவி கேட்டுள்ளதாகவும் பழைய பேருந்துகள் மிக விரைவில் சரி செய்யப்படும். ஏற்கெனவே., உள்ள பழைய பேருந்துகள் பயன்படுத்துவதால் சிரமும் ஏற்பட்டுள்ளதாகவும்., இன்னும் இரண்டு மூன்று மாதத்திற்குள் போக்குவரத்திற்கு பேருந்துகளை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img