
அமெரிக்காவின் பொறுப்பு அதிபராக 1 மணிநேரம் 25 நிமிடங்களுக்கு மட்டும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் பொறுப்பேற்று செயல்பட்டார்.
அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியரான கமலா ஹாரிசும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பெருங்குடல் நோய்க்காக அதிபர் ஜோ பைடனுக்கு மயக்கவியல் நிபுணர்கள் அன்ஸ்தீஸியா எனப்படும் மயக்க மருந்தை செலுத்தி சிகிச்சை வழங்கினர்.
இதனால், அவர் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை, அதிபர் பொறுப்பு, துணை அதிபரான கமலா ஹாரிஸிடம் ஒப்படைக்கப்பட்டது.
சுமார், 1 மணி நேரம் 25 நிமிடம் கமலா ஹாரிஸ் அதிபர் பொறுப்பு வகித்தார். இதன்மூலம், அமெரிக்காவின் தற்காலிக அதிபரான முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக, 2005, 20007ம் ஆண்டுகளில் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அதிபராக இருந்த போது, தற்காலிக அதிபர் பொறுப்பு நிகழ்வு நடந்ததாகக் கூறப்படுகிறது.