சமீப காலங்களாக ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துகொண்டே உள்ளன. பல நாள்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை, ஒரு போன் காலில் நூதனமான திருடிவிடுகின்றனர்
அவர்கள் குறித்து காவல் துறை தரப்பிலும் வங்கிகள் தரப்பிலும் எச்சரிக்கை செய்திகள் விடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு வீடியோவுடன் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ‘சிலர் வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறி பாஸ்வேர்டு, ஓடிபி போன்ற விவரங்களைக் கேட்கின்றனர். வாடிக்கையாளர்கள் அதை வழங்கிவிட்டால் அதை வைத்து வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருடிவிடுகின்றனர்.
வாடிக்கையாளர்கள் யாரும் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை யாரிடமும் வழங்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தி இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த எஸ்பிஐ, ‘ஷேரிங் என்பது கேரிங் இல்லை’ ஏடிஎம் PIN நம்பர், UPI நம்பர் , வங்கி விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம் என குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தினாலும், பணம் இழப்பு நிகழ்வு தொடர்ந்து நடைபெறுவது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
https://twitter.com/hashtag/SafetyFirstWithSBI?src=hash&ref_src=twsrc%5Etfw