இந்த ஆண்டிற்கான வார்த்தை தடுப்பூசி: மெரியம் வெப்ஸ்டர் நிறுவனம் தேர்வு!

Published:

vaccine - 2026

இந்த ஆண்டிற்கான வார்த்தையாக, ‘தடுப்பூசி’ என்ற வார்த்தையை, ‘மெரியம் வெப்ஸ்டர்’ நிறுவனம் தேர்வு செய்து உள்ளது.

அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாகாணத்தை தலைமையிடமாக வைத்து இயங்கும் மெரியம் வெப்ஸ்டர் நிறுவனம் ‘டிக்ஷனரி’ எனப்படும் அகராதிகளுக்கு பெயர்பெற்றது.

Merriam Webster Foundation - 2026

இந்த நிறுவனம் ஆண்டுதோறும் ஒரு வார்த்தையை தேர்வு செய்து, சிறந்த வார்த்தையாக அறிவித்து வருகிறது.

கடந்த 2020ம் ஆண்டு ‘பேண்டமிக்’ எனப்படும் பெருந்தொற்றை குறிப்பிடும் வார்த்தை தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான வார்த்தை தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘வேக்சின்’ எனப்படும் தடுப்பூசியை குறிப்பிடும் வார்த்தையை மெரியம் வெப்ஸ்டர் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.

Peter Sokolovsky - 2026

இதுகுறித்து, மெரியம் வெப்ஸ்டர் நிறுவன ஆசிரியர் பீட்டர் சோகோலோஸ்கி கூறியதாவது:
இந்த ஆண்டில் தடுப்பூசி என்ற வார்த்தை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த ஆண்டின் வார்த்தையாக அது தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த வார்த்தையில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, அறிவியல் சார்ந்தது. விரைந்து தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்ட விஷயம் அது. இரண்டாவது, தடுப்பூசி கொள்கை மற்றும் அதை வைத்து நடக்கும் அரசியல். இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Related articles

Recent articles

spot_img